குடல் குழம்புக்கு நிகரான சுவை தரும் அப்பளப்பூ குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அப்பளப்பூ – 10
பாசிப் பருப்பு – கால் கப்
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 6
மிளகாய்த் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
செய்முறை:
தேவையான அப்பளப்பூவை எடுத்து தயாராக வைக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, தேங்காய், பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பினை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தனியாக அப்பளப்பூவை எண்ணையில் பொறித்து எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் வேக வைத்த கடலைப்பருப்பினை சேர்த்து, அரைத்த மசாலை மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து விடவும். குழம்பு நன்றாக கொதித்த பின், பொறித்த அப்பளப்பூவை சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும். சுவையான அப்பளப்பூ குழம்பு ரெடி.