25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201704170936164359 Relieved from stress SECVPF
மருத்துவ குறிப்பு

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவோம்

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் ஏற்படுகிற நடுக்கம், எந்த செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போக செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவோம்
மாணவர்களே, இன்று காணப்படும் பரபரப்பான சூழலில் எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சமீபகாலங்களில் ஒருவருக்கொருவர் பேசி கொள்வது குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு காரணம் செல்போன் மற்றும் டி.வி தான்.

அதிலும் குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என சமூக வலைதளங்களிலேயே பாதிநேரத்தை பலர் செலவிடுகிறார்கள். பெற்றோர்களும் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் குழந்தைகளுடன் பேசிக்கொள்ளாமல், தொலைக்காட்சியில் ஓடும் நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். இதனால் குழந்தைகள் தங்களின் மனதில் உள்ளதை சொல்ல முடியவில்லை. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மன அழுத்தநோய் ஏற்படுகிறது.

மேலும் வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் ஏற்படுகிற நடுக்கம், எந்த செயலையும் செய்ய விடாமல் சோர்ந்து போக செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும். வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் மன அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். அதேபோல் செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன.

அதாவது, எந்த பிரச்சினையையும் என்னால் கண்டிப்பாக சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். இதற்கு முன் வந்த பிரச்சினையை யோசிக்கவும். அதுபோல் இதுவும் விலகும் என்று உறுதி கொள்ள வேண்டும். பசிக்கும் நேரத்தில் சரியாக சாப்பிட வேண்டும். தூங்கும் நேரத்தில் தூங்கிவிட வேண்டும்.

201704170936164359 Relieved from stress SECVPF

உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்ல வேண்டும். உங்கள் உணர்வு மற்றும் குணம்தான் உங்களுக்கு மன அழுத்தம் வர காரணம் என்பதை உணர வேண்டும்.

மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தை தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். எனக்கு எதற்கு இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக அடுத்து என்ன? என்ற அணுகுமுறையை கைக்கொள்கிற போது செயல்பட வேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கி போட்டுக்கொண்டு மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்து விழச் செய்கிறது. இந்த கூடுதல் பாரம் மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால் செய்ய முடியாதவற்றையும், செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்து சொல்வதே நல்லது.

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்க தொடங்கி விட்டால் கொஞ்சதூரம் நடந்து வருவது பயன்தரும். எத்தகைய பதற்றத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு என்பதால், நல்ல இசைகளை கேளுங்கள். அதிகநேரம் செல்போன் உபயோகிப்பதை தவிருங்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள்.

வீட்டில் இருக்கும் போது குழந்தைகளிடம் மனம்விட்டு பேசுங்கள். மன்னிப்பு, பொறுமை, மனிதநேயம் போன்ற உயரிய பண்புகளை மனதில் ஆழமாய் பதியுங்கள். ஆனந்தமாய் இருங்கள். வாழ்க்கை சோகங்களை சுமக்கும் கழுதையல்ல. லட்சியங்கள் ஆனந்தம் தருபவையாய் இருக்கட்டும் என செயல்பட்டால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

Related posts

பித்தப்பை கற்களுக்குத் தீர்வு

nathan

ஆண்மை பெருக்கும் வால்நட்

nathan

குழந்தையின் மேனி நீலநிறமா இருக்கா?ஜாக்கிரதை

nathan

வாய்ப்புண் யாருக்கு வரும்?தடுப்பது எப்படி?

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?

nathan

நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற்படும் மூட்டுவலி

nathan

மூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம்!

nathan

சிந்தனைகளை செதுக்குங்கள்… வெற்றி நிச்சயம்

nathan

காது குடைந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

nathan