சிம்பிளாக எளிய முறையில் ஏதேனும் வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், குடைமிளகாய் புலாவ் செய்து சாப்பிடுங்கள். இப்போது குடைமிளகாய் புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 1/2 கப்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1/4 கப்
ஏலக்காய் – 1
கிராம்பு – 2
பட்டை – 1/4 இன்ச்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
அரைப்பதற்கு…
பூண்டு – 3 பற்கள்
மிளகு – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 5
செய்முறை:
* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்றாக கழுவி நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
* மிக்ஸியில் பூண்டு, மிளகு, முந்தியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும். சாதத்தை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தாளித்த பின் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டவும்.
* அடுத்து உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான ஈஸியான குடைமிளகாய் புலாவ் ரெடி!!!