29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl4744
சிற்றுண்டி வகைகள்

உப்புமா பெசரட்டு

என்னென்ன தேவை?

பச்சைப்பயறு – 1 கப்,
இட்லி அரிசி – 1 கப்,
பச்சைமிளகாய் – 8,
இஞ்சி – ஒரு துண்டு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், (வெங்காயம் – 1 + பச்சைமிளகாய் + கொத்தமல்லித்தழை – தூவ).

உப்புமா செய்ய…

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
ரவை – 1/2 கப்,
தண்ணீர் – 1 கப்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறு, இட்லி அரிசியை 4 மணிநேரம் ஊறவைத்து, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். இத்துடன் சீரகம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், ரவை சேர்த்து நன்கு வறுக்கவும். இத்துடன் உப்பு, தண்ணீர் சேர்த்து உப்புமா செய்து இறக்கவும். சூடான கல்லில் அரைத்த மாவை ஊற்றி பெசரட்டு வார்த்து, எண்ணெய் விட்டு அதற்கு மேல் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் உப்புமா வைத்து எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.sl4744

Related posts

Super சிக்கன் வடை : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

கேழ்­வ­ரகு புட்டு

nathan

கேழ்வரகு புட்டு

nathan

ஜாலர் ரொட்டி

nathan

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்

nathan

சுவையான வெண்டைக்காய் பக்கோடா

nathan

பாட்டி

nathan

சத்தான கோதுமை ரவா தோசை

nathan