30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
சிற்றுண்டி வகைகள்

ஒக்காரை

மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மாப்பிள்ளை தலை தீபாவளி வரும் நேரத்தில் கட்டாயம் செய்வார்கள். தலை தீபாவளி இல்லாத நேரத்திலும் மதுரை மாவட்டத்தில் ஒக்காரை கட்டாயமாக தீபாவளி ஸ்பெஷலாக செய்வார்கள். இத்துடன் வெள்ளை அப்பம் கட்டாயம் இருக்கும். இதை கடலைப் பருப்பிலும் செய்வார்கள். பயத்தம் பருப்பிலும் செய்வார்கள். கடலைப் பருப்பில் செய்தால் ருசி அதிகம்.

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
நெய் – 1/2 கப்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – சிறிது.

பாகிற்கு:

வெல்லம் – 2 கப்,
தண்ணீர் – 1 கப்.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, சிறிதளவுகூட தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைக்கவும். அடிகனமான கடாயில் நெய்யை சூடாக்கிப் பின் அரைத்த பருப்பை கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சவும். சிறிது கொதித்ததும், பருப்பின் மேல் கொட்டி கைவிடாமல் கிளறவும். ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த தேங்காய்ப் பல் சேர்த்து பரிமாறவும்.

Related posts

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

nathan

முட்டைகோஸ் செட் ரொட்டி

nathan

அன்னாசி பச்சடி

nathan

தக்காளி – கார்ன் புலாவ்

nathan

ஓட்ஸ் குழி பணியாரம்

nathan

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

nathan

பால் அப்பம் செய்முறை விளக்கம்

nathan

ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

nathan

மட்டன் கபாப்

nathan