25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
yUldIXF
சிற்றுண்டி வகைகள்

வெள்ளரி அல்வா

என்னென்ன தேவை?

மக்காச்சோள மாவு – 1 கிலோ,
சர்க்கரை – 1 கிலோ,
வெள்ளரி விதை – 300 கிராம்,
பச்சை கலர் பவுடர் – சிறிதளவு,
நெய்- சிறிதளவு


எப்படிச் செய்வது?

மக்காச்சோள மாவில் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு கெட்டி பதத்திற்கு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். கனமான பாத்திரத்தில் பிசைந்த மாவை மிதமாக சூடாக்கவும். லேசாக சூடானதும் சர்க்கரையை அதில் சேர்க்கவும். இதைக் கெட்டியாக விடாமல் வேகமாக கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். கொதிக்க விடக்கூடாது. கொதித்து விட்டால் கெட்டியாகிவிடும். அதனால் தேவையான அளவுக்குத் தண்ணீர் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அல்வா பதத்திற்கு வந்த பிறகு மீதியிருக்கும் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும். பேஸ்ட் போல திரண்டு வரும்போது காய்ந்த வெள்ளரி விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். இறுதியாக கலர் பொடியை சிறிது தூவி கலக்கியபின் இறக்கிவிட வேண்டும். சுவையான வெள்ளரி அல்வா ரெடி!yUldIXF

Related posts

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

உருளைக்கிழங்கு பஜ்ஜி

nathan

சிவப்பு அவல் புட்டு

nathan

சன்டே ஸ்பெஷல் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

சத்தான ஓட்ஸ் கட்லெட் : செய்முறைகளுடன்…!

nathan

பூரி

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

nathan

கம்பு உப்புமா

nathan