25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
02 1480657290 castilesoap
தலைமுடி சிகிச்சை

பொடுகை விரட்ட கண்ட ஷாம்பூ எதுக்கு? 5 நிமிஷத்துல தேங்காய் எண்ணெய் ஷாம்பூ செஞ்சு பாருங்களேன்!!

உண்மையில் சில விஷயங்களை கால தாமதமக கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் ஒன்றுதான் ஷாம்புவில் இருக்கும் ரசாயனம் புற்று நோய் முதற்கொண்டு பல நோய்களை தரும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்

விலைகொடுத்து ஏன் நோய்களை வாங்க வேண்டும். வீட்டில் வெறும் சில நிமிடங்களில் ஷாம்பூ தயாரிக்க முடியும். அதற்கான பொருட்களை ஒரே முறை வாங்கி தயாரித்து வைத்தால் மாதம் முழுவதும் உபயோகிக்கலாம். எப்படியென்று பார்க்கலாமா?

இந்த ஷாம்பூக்கள் பொடுகை நெருங்க விடாது, பக்க விளைவுகளை தராது, முடி வளர்ச்சியை தூண்டும். அழுக்குகளை போக்கும். மென்மையான கூந்தலை தரும். குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. முயற்சித்துப் பாருங்கள்.

தேங்காய் எண்ணெய் ஷாம்பூ தேவையானவை : நீர் – கால் கப் கேஸ்டைல் சோப் – அரை கப் உப்பு – 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் ஜொஜொபா எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் – 10 துளிகள்

செய்முறை : முதலில் நீரை இளஞ்சூட்டில் சூடுபடுத்துங்கள். அதில் கேஸ்டைல் சோப்பை கரையுங்கள். நுரை உண்டாகும். அதில் உப்பு சேர்க்கவும். பின்னர் மற்ற எண்ணெய்களை சேர்த்து நன்றாக குலுக்கி, ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். எப்போது வேண்டுமானாலும் அதனை உபயோகப்படுத்தலாம்.

தேவையானவை :
தேங்காய் எண்ணெய்- 1 கப் கற்றாழை ஜெல் – 1 கப் சுத்தமன மினரல் நீர் – கால் கப் தேன் – 2 டேபிள் ஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் – 10 துளிகள் ரோஸ்மெரி எண்ணெய் – 10 துளிகள் கேஸ்டைல் நீர்த்த சோப் – 2 ஸ்பூன்

செய்முறை : முதலில் நீரை லேசாக சூடுபடுத்து தேனை கலக்குங்கள். மீதமுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கி இரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள்.

பொடுகிற்கான ஷாம்பு : தேவையானவை : தேங்காய் பால் – அரை கப் கேஸ்டைல் லிக்விட் சோப் – 1 கப் கிளிசரின் – அரை கப் தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன் வாசனை எண்ணெய் (ஏதாவது)

முதலில் எண்ணெயையும் கிளிசரினையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னொரு பாத்திரத்தில் தேங்காய் பாலையும் கேஸ்டைல் சோப்பையும் கலக்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் கலவையை கலக்கிக் கொண்டே பால் கலவையை ஊற்றுங்கள். பின்னர் நீங்கள் விருப்பப்பட்ட வாசனை எண்ணெயை கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.

02 1480657290 castilesoap

Related posts

வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் ஜெல் தயாரிப்பது எப்படி? எளிய முறை

nathan

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

nathan

கூந்தல்‬ சீவும் முறை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களது கருமையான கேசம் பழுப்பு நிறமாக மாறுகிறதா?

nathan

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

nathan

சில் கிளைமேட்டில் கூந்தல் பராமரிப்பு

nathan

ஆண்களே! இதோ வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும் சில நாட்டு வைத்திய வழிகள்!

nathan