25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
கால்கள் பராமரிப்பு

குதிகால் வெடிப்பைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்,tamil ayurvedic beauty tips

 

22-1419229698-9honeyரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின் கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்புகள் மறையும்.

வினிகர் வெள்ளை வினிகரில் அசிடிக் ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவே 1/4 ப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து 10 நிமிடம் அந்த கலவையில் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இந்த மாதிரி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேன் 1/2 வாளி வெதுவெதுப்பான நீரில், 1 கப் தேன் சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, மெருகேற்ற உதவும் கல் பயன்படுத்தி ஸ்கரப் செய்து வர வேண்டும். இதன் மூலமும் குதிகால் வெடிப்பைத் தடுக்கலாம்.

Related posts

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!

nathan

இதைக் கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்ய, கை, கால், முகத்தில் உள்ள முடி மாயமாய் மறையும் தெரியுமா?

nathan

கைகள் கருப்பாக உள்ளதா?

nathan

உங்க கால் விரல் நகம் இப்படி அசிங்கமா இருக்கா?அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

அழகை கெடுக்கும் பாத வெடிப்பை தீர்க்கும் இயற்கை வழிமுறை

nathan

மெத்தென்ற பாதம் கிடைக்க எளிமையான டிப்ஸ் !!

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!

sangika

குதிகால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்!..

sangika