கடுமையான வேலை செய்யபவர்களுக்குதான் முதுகுவலி வரும் என்பதில்லை. ஏ.சி.அறையில் அமர்ந்து கம்யூட்டரில் சொகுசாக வேலை செய்பவர்களுக்கும் முதுகுவலி வரும். முதுகு வலியிருந்து தப்பிக்க சில எளிய முறைகள் உள்ளன. அதை பின்பற்றினால் முதுகுவலி நம்மை நெருங்காது.
இது போன்ற வலிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது, சாப்பிடும் உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இல்லாதது, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து போன்ற பல பிரச்னைகளை உள்ளன.
வேலை செய்யும்போது சில விஷயங்களில் கவனித்தால், முதுகு வலி பிரச்னையிலிருந்து தப்பித்துவிடலாம். அதற்கு இதோ சில யோசனைகள்:
அலுவகத்தில், வீட்டில் சகஜமாக “டிவி’ பார்க்கும் போது, உட்காரும் நிலையை கவனிக்க வேண்டும். உட்காரும் போது நேராகவும், சரியான உடல்
கோணத்தில் அமரவேண்டும். வேலை செய்யும் போது, அவ்வப்போது கழுத்தை நேராகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளவேண்டும்.
கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறவர்கள், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு உட்காரலாம். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கையை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.
நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். 20 முறை தொடலாம். பயிற்சியின் நேரத்தை இரண்டு நிமிடங்கள் வரை, செய்யலாம். பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள்.
கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள். கால்சியம் எலும்புக்கு முக்கிய தேவை. உணவில் உள்ள கால்சியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் “டி’ அத்தியாவசியம்.
வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுபடுவது நல்லது. இது உற்சாகத்தையும் தரும். வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில், நம் தசைகளை உற்சாகப்படுத்த இது உதவும்.
எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெய் உடலில் தேய்த்து, சிறிது நேரம் வெயிலில் நடப்பது எலும்புக்கு நல்லது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்வது, நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களுடன் பழகுவது மாற்றம் தரும்.
முதுகுவலி வந்தால், சிலருக்கு இடுப்பு பிடிப்பும் வரும். அதனால், ஆயுர்வேதத்தில் முதுகுவலி சிகிச்சையுடன், இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. இடுப்பு வலிக்கு ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிச்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பயனை தருகின்றன.