24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
EiUA4aP
சிற்றுண்டி வகைகள்

பட்டாணி பூரி

என்னென்ன தேவை?

மைதா மாவு – 1/2 கப்,
ரவை – 1 டேபிள்ஸ்பூன்,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

பூரணத்திற்கு…

பச்சை பட்டாணி – 1/2 கப்,
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்,
தனியாதூள் – 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
சர்க்கரை – 1/4 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பட்டாணியை மிக்சியில் கொர கொரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, உப்பு, எண்ணெய் சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசையவும். ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து அரைத்த பட்டாணியை நன்கு வறுத்துக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி, பச்சை வாசனை போனதும், இறக்கி ஆறவைக்கவும். மாவை பூரி போல் தேய்த்து வதக்கி வைத்துள்ள பூரணக் கலவையை வைத்து மூடி, தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.EiUA4aP

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி போண்டா

nathan

கோதுமை உசிலி

nathan

ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ்

nathan

சுவை மிகுந்த மாலை நேர சிற்றுண்டி – கார்ன்ஃப்ளேக்ஸ் வெங்காய பஜ்ஜி (வீடியோ இணைப்புடன்)

nathan

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

nathan

சூப்பரான நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி

nathan

கோதுமை ரவை இட்லி&தோசை

nathan

வெள்ளரி அல்வா

nathan

பிரெட் வெஜிடபிள் புலாவ்

nathan