29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
paneer masala 14 1468499896 1
சைவம்

வெஜிடபிள் மசாலா குருமா.

தேவையான பொருட்கள்:-
நறுக்கிய காய்கறிகள் —————– 1 கப்
( கேரட் , பீன்ஸ் , உருளை கிழங்கு, பச்சை பட்டாணி)
மஞ்சள் தூள் ————–1/4 டீஸ்பூன்.
உப்பு தேவையான அளவு.

அரைக்க;-
தேங்காய் துருவல் ———————-1/4 கப்.
கசகசா—————————————— 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை ———————–1 டீஸ்பூன்
சீரகம்——————————————– 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் ———————— காரத்திற்க்கேற்ப
வெள்ளை பூண்டு ———————- 4 பல்
இஞ்சி ——————————————-சிறிய துண்டு
வெங்காயம் ——————————- 1
தக்காளி பழம் ————————— 1
பட்டை —————————————– சிறிய துண்டு
கிராம்பு —————————————1
கொத்தமல்லித்தழை ————— சிறிதளவு.
தாளிக்க:-
எண்ணெய் ———————– 3 டேபிள் ஸ்பூன்
கடுகு ——————————— 1/2 டீஸ்பூன்
சீரகம் ——————————– 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி ———–1
கறிவேப்பில்லை சிறிதளவு.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு.

செய்முறை :-
சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த காய்கறிகளை நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்காமல் பச்சையாக மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

குக்கரில் கழுவி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூடி போட்டு அடுப்பில் வைத்து காய்கறிகள் குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கடைசியாக நறுக்கிய தக்காளி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக குழைய வதக்கி முன்பே வேகவைத்துள்ள காய்கறி கலவையில் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் கடைசியாக மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.

இந்த சுவையான வெஜிடபிள் குருமா பூரி, சப்பாத்தியுடன் சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட
மேலும் இரண்டு பூரி அதிகமாக சாப்பிடும் அளவிற்கு மிக மிக ருசியாக இருக்கும்.

குறிப்பு:- காலிஃப்ளவர் சேர்ப்பதாக இருந்தால் முதலில் சிறு சிறு பூக்களாக பிரித்தெடுத்து நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து அதில் இந்த பிரித்தெடுத்த பூக்களை போட்டு சிறிது நேரம் மூடி வைத்து விடவும்.
பின் இந்த பூக்களை மறுபடியும் ஒரு முறை நன்றாக கழுவி.கடைசியாக குருமாவை கொதிக்க வைக்கும் போது சேர்த்து வேக வைக்கவும்.

கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவரை போட்டு வைப்பதால் அதில் இருக்கும் கிருமிகள் அழிந்து , பூக்களும் நன்றாக வெந்து விடும். அதனால் குருமாவில் கடைசியாக சேர்த்தாலே போதும்.
காலிஃப்ளவரை முன்பே குக்கரில் போட்டு வேக வைத்தால் குழைந்து போய்விடும்.
அரைப்பதற்கு கொத்தமல்லி தழையை கொஞ்சம் அதிகமாக சேர்த்தால் நல்ல வாசனையுடன் குருமா மணக்கும்.
paneer masala 14 1468499896 1

Related posts

மேங்கோ கர்டு ரைஸ்

nathan

சுவையான ட்ரை ஃபுரூட் புலாவ்

nathan

பேச்சிலர் சமையல்: வெஜிடபிள் பிரியாணி

nathan

குஜராத்தி கதி கிரேவி

nathan

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி

nathan

பச்சை சுண்டைக்காய் கார குழம்பு

nathan

ரைஸ் வெஜ் பால்ஸ் செய்முறை விளக்கம்

nathan