30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ldapp13616
சரும பராமரிப்பு

ஃபிஷ் ஸ்பா அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்

அதென்ன ஃபிஷ் ஸ்பா என்கிறீர்களா? அது ஒன்றுமில்லை… ஆறோ, வாய்க்காலோ ஓடும் பகுதியில் நீங்கள் வசிப்பவராயின் அதில் குளிக்கும்போதும், தண்ணீருக்குள் நின்று துணி துவைக்கும்போதும் மீன்கள் உங்கள் கால்களைக் கடிக்கும். அப்போது ஒரு வித கூச்சத்தை உணர்வீர்களல்லவா? அப்படியாக மீன்கள் கடிப்பது பல விதங்களில் நமக்கு நன்மையை ஏற்படுத்தும் ஒரு சிகிச்சை என்கின்றனர்.ஸ்பா சென்டரில் தொட்டிக்குள் வளர்க்கப்படும் ஒரு வகையான மீனைக் கொண்டு உடலின் சில பாகங்களைக் கடிக்க விடுவதுதான் ஃபிஷ் ஸ்பா. பெங்களூரில் ஃபிஷ் ஸ்பா சிகிச்சை மையத்தை நடத்திவரும் டாக்டர் சுபாஷிடம் இதன் சாதக பாதகங்கள் குறித்துக் கேட்டேன்.

”ஃபிஷ் ஸ்பா ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல. துருக்கியில் 100 ஆண்டுகளுக்கு முன்பே சொரியாஸிஸ், எக்சீமா போன்ற தோல் நோய்களுக்கு மீன்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதுதான் பின்னர் ஃபிஷ் ஸ்பா என அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையானது. எல்லா வகையான மீன்களையும் இச்சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது. காரா ரூஃபா வகை மீன்களைத்தான் இதற்கு பயன்படுத்துகிறோம்.சுத்தமான, வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகளில் டஜன் கணக்கான காரா ரூஃபா மீன்கள் இருக்கும். அந்த நீருக்குள் காலை வைத்ததுமே, இம்மீன்கள் காலில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை சாப்பிட ஆரம்பித்துவிடும். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் எல்லாம் நீங்கி பாதம் புதுப்பொலிவு பெறும். இதன் காரணமாகவே மருத்துவ மீன்கள் என்று அழைக்கப்படும் இம்மீன்களை துருக்கி, சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கிலிருந்து வரவழைக்கிறோம்.

மீன் கடிப்பதால் வலி இருக்குமோ என்கிற சந்தேகம் எழலாம். இவ்வகையான மீன்கள் பற்கள் இல்லாதவை என்பதால் வலியே இருக்காது. மாறாக கூசுகிற உணர்வுதான் ஏற்படும். ஃபிஷ் ஸ்பாவிலும் சில வகைகள் உண்டு. பாதங்களுக்கு மட்டும் மேற்கொள்ளப்படுவது ஃபிஷ் பெடிக்யூர் என்று சொல்வோம். முகத்துக்கும் ஃபிஷ் ஸ்பா மேற்கொள்ளலாம். அதனை ஃபிஷ் ஃபேஷியல் என்போம். ஃபிஷ் ஃபேஷியல் செய்யும்போது முகப்பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அவை தின்றுவிடுவதால் பருக்கள், பருக்களினால் வரும் அடையாளங்களை போக்க முடியும்.

மேலும், வயதான தோற்றத்தைத் தரும் முகச்சுருக்கங்கள் இதனால் நீங்குகிறது. முகத்துக்கு பொலிவான தோற்றத்தை ஃபிஷ் ஃபேஷியல் தருகிறது. காதுகளிலும், மூக்கு துவாரங்களிலும் மீன்கள் புகாமல் இருக்க மூக்குக்கு சிறு கிளிப்பும், காதுகளில் பஞ்சும் அடைத்து மிக பாதுகாப்பாக முகத்திற்கு ஃபேஷியல் தருகிறோம். முழு உடலுக்கும் கூட ஃபிஷ் ஸ்பா சிகிச்சை கொடுக்க முடியும்.குறிப்பாக சொரியாஸிஸ் நோயுள்ளவர்களுக்கு மேற்புறத்தோல் செதில் செதிலாக உதிரும். இதனால் பார்ப்பதற்கு அழகற்ற தோற்றம் உண்டாகிவிடும். அவர்களுக்கு இம்மீன்களைக் கொண்டு உடல் முழுவதும் சிகிச்சை அளிக்கும்போது இறந்த செல்களை மீன்கள் உண்பதால் தோலின் தன்மை மாறி மிருதுவாகிவிடும். புற ஊதாக்கதிர்சிகிச்சை உடன், ஃபிஷ் ஸ்பாவும் சேர்த்து கொடுக்கப்படும்போது தோலில் ஏற்படும் அரிப்பை குறைப்பதால் சொரியாஸிஸ் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஃபிஷ் ஸ்பாவினால் ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. இதனால் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறது. இதயத் தமனிகள் மற்றும் உடலின் தசைகளில் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்த ஓட்டம் இருக்கும். கால்களில் உள்ள நரம்புப் புள்ளிகளில் மீன்கள் கடிக்கும்போது அப்புள்ளிகளில் மின் தூண்டல் ஏற்பட்டு உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்புகளும் தூண்டப்பட்டு மூளை அமைதியடைந்து மன அழுத்தத்திலிருந்தும் விடுபட முடியும்.

இந்த ஃபிஷ் ஸ்பா முறை மசாஜ் செய்வது போல் இருப்பதால் கால்களில் ஏற்படும் சோர்வு, அசதிகளையும் போக்கும். பாக்டீரியாக்கள் அழிவதால் கிருமிநாசினி போல் செயலாற்றி கால்களின் வீக்கமும் குறைகிறது. பெண்களுக்கு இச்சிகிச்சையின் மூலம் மேலும் பல நன்மைகள் உண்டு. மாதவிடாய் நாட்களில் ஏற்படும் உடற்சூட்டை ஃபிஷ் ஸ்பா தணித்து அப்போது ஏற்படும் அடிவயிற்று வலியைப் போக்குகிறது.அந்நாட்களில் மனதளவிலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஃபிஷ் ஸ்பாவினால் அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சியை உணர முடியும். ஃபிஷ் ஸ்பா குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. பெண்கள் பலரும் எங்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். ஃபிஷ் ஸ்பா சிகிச்சை மேற்கொள்ள அரை மணி நேரத்துக்கு 100 ரூபாய் கட்டணம் ஆகும். வீட்டிலேயே தொட்டி அமைத்தும் மேற்கொள்ளலாம். காரா ரூஃபா மீன்கள் ஒன்று சராசரியாக ரூ. 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது” என்கிறார்
ldapp13616

Related posts

என்ன வழி தெரியுமா.? திட்டு திட்டான கருமையை போக்க

nathan

தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா?

nathan

பனிக்காலத்தில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்

nathan

எப்படி எண்ணெய் தோலிற்கு எதிராக‌ ஆலிவ் எண்ணெய் செயல்படுகிறது

nathan

அழகை அதிகரிக்க ஓட்ஸை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

முகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும்!…

sangika

‘இந்த’ ஃபேஷியல் உங்களுக்கு பளபளப்பான மின்னும் சருமத்தை தருமாம்…!

nathan

நச்சுன்னு 4 டிப்ஸ்..! வறண்ட சருமத்திற்கு இப்படியும் செய்யலாமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த சோப்பு உங்களுக்கு வயதாவதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்குமாம்…

nathan