6CiXrJy
சைவம்

தேங்காய்ப் பால் சாதம்

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி (அ) பொன்னி அரிசி (அ) சீரக சம்பா அரிசி – 2 கப்,
பெரிய தேங்காயின் முதல் கெட்டி பால் – 1 கப்,
இரண்டாம் பால் – 2 1/2 கப்,
கீறிய பச்சைமிளகாய் – 4,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
பட்டை – 2 துண்டு,
லவங்கம் – 6,
ஏலக்காய் – 4,
மிளகு – 1 டீஸ்பூன்,
பிரியாணி இலை – 2,
உப்பு – தேவைக்கு,
விருப்பத்திற்கு முந்திரி, தேவைப்பட்டால் மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைத்து வடித்து உலர்த்தவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் இரண்டாம் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அரிசி, உப்பு போடவும். மிதமான தீயில் வேகவிட்டு முக்கால் பதத்திற்கு சாதம் வெந்ததும், முதல் பால், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வேக
விடவும். அது உதிரி உதிரியாக வெந்ததும் இறக்கி நெய்யில் வறுத்த முந்திரியை நெய்யுடன் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.6CiXrJy

Related posts

கலவை காய்கறி அவியல் செய்வது எப்படி?

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan

பட்டாணி குருமா

nathan

எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

nathan

சூப்பரான துவரம் பருப்பு கடைசல்!

nathan

பீட்ரூட் சாதம்

nathan

பக்கோடா குழம்பு

nathan

நிமிடத்தில் செய்யலாம் கேரட் சாதம்

nathan

பஞ்சாப் உருளைக்கிழங்கு

nathan