26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201704071300527102 how to make Pepper Ginger Chicken SECVPF
அசைவ வகைகள்

காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன்

சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இஞ்சி பெப்பர் சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன்
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
இஞ்சி பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 2 இன்ச்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் அதில் இஞ்சி பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

* அடுத்து அதில் சிக்கனைப் போட்டு, உப்பு சிறிது தூசி பிரட்டி 20 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

* பிறகு மூடியைத் திறந்து, சிக்கனை பிரட்டி, அத்துடன் சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறி, தீயை அதிகரித்து, தண்ணீர் முற்றிலும் வற்றும் வரை வதக்கவும்.

* தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கவும்.

* காரசாரமான இஞ்சி பெப்பர் சிக்கன் ரெடி!!!201704071300527102 how to make Pepper Ginger Chicken SECVPF

Related posts

தலபாக்கட்டி மட்டன் பிரியாணி: சுலபமான முறை

nathan

கோழி ரசம்

nathan

Easy சிக்கன் 65 : செய்முறைகளுடன்…!

nathan

பேக்ட் சிக்கன் : செய்முறைகளுடன்…!​

nathan

சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு

nathan

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

nathan

கிராமத்துக் கோழிக் குழம்பு (village chicken kuzhambu)

nathan

வான்கோழி குழம்பு

nathan

மீன் குழம்பு

nathan