40 வயதுக்குள் மாதவிடாய் நின்று போனால் எலும்பு மற்றும் இதயம் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.
பெண்களின் மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்கள்
சராசரியாக 47 வயதில்தான் மெனோபாஸ் ஏற்படும். சிலருக்கு 52 வயது வரையிலும் மாதவிடாய் தொடரலாம். அதையும் தாண்டிப் போகும்போது மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும். ஹார்மோன் பிரச்சனை, கர்ப்பப்பை, சினைப்பையில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? என்று சோதித்துப் பார்க்க வேண்டும். மெனோபாஸ் ஏற்படும் வயது அதிகரிப்பது மட்டுமல்ல குறைவதும் கூட பிரச்சனைதான்.
40 வயதுக்குள் மாதவிடாய் நின்று போனால் எலும்பு மற்றும் இதயம் ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். மெனோபாஸ் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் ரத்தக்கசிவு அதிகமாதல், முறையற்ற ரத்தக்கசிவு ஆகியவற்றை சாதாரணமாக நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறானது. அப்படியான சூழலில் மருத்துவரை நாடுவது அவசியமாகும்.”
இயற்கையை நாம் புரிந்து கொள்வதும், இயற்கையான வாழ்வியலுக்குத் திரும்புவதுமே எல்லாவற்றுக்குமான தீர்வு.
32 வயதுக்குள் மணமுடித்ததால் எந்த சிக்கலும் இல்லாமல் கருக்கூடலும், பிரசவமும் இருந்தது. குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பருவமெய்தி விட்டாலும் தாய்மை அடைவதற்கான வயதைத் தள்ளிப்போடும்போது திடகாத்திரமான கருமுட்டை உற்பத்தியாகும் வயதைத் தாண்டி விடக்கூடும். இதனால் கருக்கூடலில் சிக்கல், மலடு ஆகியவை இன்றைக்கு சமூகத்தில் பெருகி வருகின்றன. 35 வயதிலேயே கூட மெனோபாஸ் அடையும் பெண்கள் ஏராளம்.
இயற்கையாக இருக்கும் உடல்வாகுப்படி 30-40 வயதில்தான் பாலுறவில் உச்சபட்ச இன்பத்தைப் பெற முடியும். இப்படியான நிலையில் மெனோபாஸ் அடையும்போது அதை அனுபவிக்க முடியாமலேயே போய் விடலாம். மாதவிடாய் நின்று போகும்போது தொந்தரவு கொடுத்துதான் நிற்கும். 2 ஆண்டுகள் வரையிலும் கூட இப்பிரச்சனை நீடிக்கலாம். அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், முறையற்ற மாதவிடாய் ஆகியவை ஏற்படும்.
இதன் காரணமாக ஏற்படும் வலி மற்றும் அவஸ்தையின் காரணமாக கருப்பை மற்றும் கர்ப்பப்பையை எடுத்துவிடக்கூறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். மெனோபாஸ் பிரச்சனைக்காக கருப்பையை எடுத்து விடுவது முற்றிலும் தவறானது. இதனால் கருப்பை கொடுக்கும் ஹார்மோன் இல்லாமல் போவதால் பல நோய்களுக்கு ஆட்பட நேரிடலாம். இயற்கையை புரிந்து கொண்டு அதனுடன் இயைந்து வாழ்வது மட்டுமே இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும்.