28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201704041545139957 fish pepper masala SECVPF
அசைவ வகைகள்

காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா

சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட இந்த மீன் மிளகு மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் மிளகு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா
தேவையான பொருட்கள் :

துண்டு மீன் – அரை கிலோ
வெங்காயம் – 2௦௦ கிராம்
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஐந்து
கொத்தமல்லி இலை – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

* அனைத்தும் ஒரளவு வதங்கியதும் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.

* மீன் வெந்ததும், மிளகு துளை சேர்த்து கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும்.

* மீன் மிளகு மசாலா ரெடி.201704041545139957 fish pepper masala SECVPF

Related posts

அவசர பிரியாணி

nathan

அவித்த முட்டை பிரை

nathan

கடாய் பன்னீர் கிரேவி

nathan

சிக்கன் கிரீன் கிரேவி:

nathan

தயிர் சிக்கன்

nathan

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

nathan

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan

நாவூரும் சுவையில் இறால் சுக்கா! எவ்வாறு தயார் செய்யலாம்?

nathan

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan