27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
1476947123 2514
சிற்றுண்டி வகைகள்

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு….

தேவையான பொருட்கள்:

திணை அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கைப்பிடி
மிளகு, சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காரட், பீன்ஸ், பட்டாணி – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கீற்று
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* துவரம் பருப்பை கரகரப்பாக பொடித்து கொள்ளவும். திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும், மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிகளை போட்டு வதக்கி உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.

* தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா தயார்.1476947123 2514

Related posts

பானி பூரி!

nathan

வாழைப்பழ அப்பம்

nathan

சுவையான பிரட் வடை தயார்

nathan

காராமணி கொழுக்கட்டை

nathan

பன்னீர் போண்டா

nathan

அரிசி ரொட்டி

nathan

முட்டை பரோட்டா செய்வது எப்படி

nathan

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

nathan

யாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்

nathan