27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
30 1480496728 bleach
முகப் பராமரிப்பு

வீட்டிலேயே ப்ளீச் எப்படி செய்வது? அருமையாக ரெசிப்பிகள்

ப்ளீச் உடனடிய நிறம் தரும். அதாவது கருமையை உடனடியாக போக்கும். பார்லர்களில் செய்யப்படும் கெமிக்கல் ப்ளீச் முகத்தில் பக்க விளைவுகளை தந்துவிடும்.

வீக்கம், பருக்கள், கொப்புளங்கள் உண்டாகி சருமத்தையே சிலருக்கு பாழ்படுத்த நேரிடலாம்.

ஆகவே பார்லர்களில் முடிந்தவரை ப்ளீச் செய்வதை தவிருங்கள். அதற்கு மாற்றாக நீங்கள் வீட்டிலேயே ப்ளீச் செய்து கொள்ளலாம்.

சிறிதும் பக்க விளைகளின்றி, சருமத்திற்கு ஊட்டம் தந்து கருமையை போக்கிடும். அப்படி அட்டகாசமான குறிப்புகளைதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

உருளை ப்ளீச் பேக் : உருளைக் கிழங்கு ரோஸ்வாட்டர் தேன்(அ) எலுமிச்சை சாறு உருளைக் கிழங்கின் தோல் சீவிக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் தேன் சேர்த்து கலக்குங்கள். எண்ணெய் சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை முகம், கழுத்துப் பகுதியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். பளிச்சென்ற முகத்தை காண்பீர்கள்.

தக்காளி ப்ளீச் பேக் : தக்காளி தயிர் தக்காளியின் விதையில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் போடவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். முகம் ஜொலிப்பதை உணருங்கள்.

வெள்ளரி ப்ளீச் பேக் : வெள்ளரிக்காய் சோற்றுக் கற்றாழை வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் உடனடியாக கருமை மறைந்திருப்பதை பார்க்கலாம்.

ஆரஞ்சு ப்ளீச் பேக் : ஆரஞ்சு தேன் ரோஸ் வாட்டர் ஆரஞ்சு தோலை வெயிலில் நன்றாக காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள். அந்த பொடி சிறிது எடுத்து அதனுடன் தேன், ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களில் கழுவிடுங்கள்.

எலுமிச்சை ப்ளீச் பேக் : எலுமிச்சை சாறு கிளிசரின் தேன் எலுமிச்சை சாற்றில் சிறிது கிளிசரின் அல்லது தயிர் மற்றும் தேன் கலந்து முகத்தில் த்டவுங்கள். 10 நிமிடங்களில் கழுவுங்கள். முகம் பொலிவாக இருக்கும்.

ஓட்ஸ் ப்ளீச் பேக் : ஓட்ஸ் யோகார்ட் எலுமிச்சை சாறு ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன் பொடி செய்த ஓட்ஸ் , 1 ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகிய அளவுகளில் எடுத்து நன்றாக கலக்குங்கள். இதனை முகத்திலும் கழுத்திலும் போட்டு 20 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் பளபளக்கும்.

30 1480496728 bleach

Related posts

உங்களுக்கு தெரியுமா சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை

nathan

முகத்தில் இருக்கும் மச்சத்தை நீக்கும் எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்

nathan

ஆலிவ் ஆயிலை சருமத்திற்கு பயன்படுத்தினால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது எனத் தெரியுமா?

nathan

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

உங்கள் கண்களின் நிறம் உங்களை பற்றி என்ன சொல்கிறது? தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டிலேயே முக அழகை மேருகூட்டலாம் இதை செய்யுங்க தினமும்….

sangika

சருமத்தை மென்மையாக்கும் பழங்கள் fruit facial tips in

nathan

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

nathan