27.9 C
Chennai
Sunday, Jun 23, 2024
201704030858587572 how to make banana flower chapati SECVPF
சைவம்

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வாழைப்பூவை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – கால் கிலோ
பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன்
நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 7
பச்சைமிளகாய் – ஒன்று
பூண்டு – 2 பல்
சீரகம் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தயிர் – 2 டீஸ்பூன்

201704030858587572 how to make banana flower chapati SECVPF
செய்முறை :

* வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கி சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி ரெடி.

குறிப்பு :

வாழைப்பூ சீக்கிரத்தில் கறுத்துவிடும். எனவே, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.

Related posts

நிமிடத்தில் செய்யலாம் கேரட் சாதம்

nathan

கடலைக் கறி

nathan

விதம் விதமான வெஜிட்டேரியன் கிரேவி

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan

கிராமத்து பச்சை மொச்சை குழம்பு….

nathan

சுவையான சேப்பங்கிழங்கு கிரேவி

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan

குடைமிளகாய் சாதம்

nathan

அபர்ஜின் பேக்

nathan