இயற்கை அளித்த செடி, கொடி, மரங்களின் இலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. துளசி இலைகள் ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.
வில்வம் இலைகள் காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை மற்றும் சீதபேதிக்கு மிகவும் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோவில்களில் வில்வ இலை கிடைக்கும். அருகம்புல் எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் வெறும் வயிற்றில் பசி ஏற்பட்டவுடன் சாப்பிடவும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். பின் மதியச் சாப்பாடு உண்ணலாம்.
இம்மாதிரி உணவருந்துவதால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை மற்றும் கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று போன்றவற்றை குணமாக்கிட அருகம்புல் சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்வதில் சிறந்தது அருகம்புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். ரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோவில்களில் அருகம்புல் கிடைக்கும்.
அரச இலைச்சாறு ஏழைகளின் டானிக்காக கருதப்படுகிறது. நல்ல மலமிளக்கியாகவும், உடலை குளிர்ச்சியாக வைத்திடவும் செய்கிறது. கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது. எல்லா விநாயகர் கோவில்களிலும் அரசமரம் இருக்கலாம்.
பூவரசு இலையை அரைத்து தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் பூசலாம். அரைத்த சாறும் பேதி, சீதபேதிக்கு மிகவும் சிறந்தது.
கல்யாண முருங்கை இலை அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலை குறைக்கும். மலமிளக்கி, மாத விடாய் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீழிவு, சீதபேதி, வாதம் குணமடையும்.
17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு, இதன் சாறு நல்ல பலன் தரும்.
வாழைத்தண்டு சாறு சிறுநீரகக்கல் ஆபரேஷன் செய்யாமலேயே குணமடைய செய்கிறது. 100 கிராம் தண்டுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு, மிக்சியில் சட்னி
போல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்கிறது. அனைவரும் வாரம் இருநாட்கள் வாழைத்தண்டு சாறு குடிக்கலாம்.
கொத்தமல்லி இலை பசியைத் தூண்டும், பித்தம் குறைக்கும், காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம் மற்றும் நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும். கறிவேப்பிலை பேதி, சீதபேதி, காய்ச்சல், எச்சல், ஈரல் கோளாறுகளை அகற்றும். புதினா இலை சிறுநீர் பிரச்னை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.
தும்பை இலை பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றை குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும், வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.