வெற்றிலை நாம் தொன்றுதொட்டு பயன்படுத்திவரும் மூலிகை.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும்; வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். இதற்கு பாம்பின் விஷத்தைக்கூட மாற்றும் தன்மை உண்டு.
நுரையீரல் பலப்பட வெற்றிலைச்சாறு, 5 மி.லி.,யுடன் இஞ்சிச் சாறு, 5 மி.லி., கலந்து தினமும் காலை வேளையில், வெறும் வயிற்றில் குடித்துவந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
வயிற்று வலி நீங்க, இரண்டு தேக்கரண்டி சீரகத்தை, மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைக்க வேண்டும்.
ஐந்து வெற்றிலை எடுத்து, காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி, வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்க வேண்டும். பின், 100 மி.லி., நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து, ஆறியபின் வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால், வயிற்று வலி நீங்கும்.
சர்க்கரை அளவு கட்டுப்பட, நான்கு வெற்றிலை, ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு கைப்பிடி அருகம் புல்லை சிறிதாக நறுக்கி, 500 மி.லி., தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவைத்து, 150 மி.லி.,யாக வற்றவைத்து ஆறியவுடன் தினமும் மூன்று வேளை உணவுக்குமுன், 50 மி.லி., குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
வெற்றிலை சாறுடன் சுண்ணாம்பு கலந்து, தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். தீப்புண் மீது வெற்றிலையை வைத்து கட்ட தீப்புண் ஆறும்.