கருவுற்ற மாதங்கள் கூடும் காலத்தில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் மார்பகமும் ஒன்று. மாதம் கூடும் போது அதற்கேற்ற மார்பக உள்ளாடையினை அணிய வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் அதற்கனெ பிரத்யேக உள்ளாடை உள்ளது. இது குழந்தைக்கு பால் கொடுக்க ஏதுவாக இருக்கும்.
சரியான அளவு பார்த்து இதனை அணிவது மிக அவசியம். மார்பகத்தினை அழுத்தும் உள்ளாடை மிகுந்த வலியினை ஏற்படுத்தும். மிகவும் லூசான உள்ளாடையும் வலியினை ஏற்படுத்தும். இக்காலத்தில் மார்பக உள்ளாடை 4 பட்டை ஹீக்குள் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பக கனத்தினை தாங்க முடியும்.
கர்ப்ப காலத்தில் அணிய வேண்டிய மார்பக உள்ளாடை
4 பட்டை நாடாக்கள் பட்டையாய் அகன்று இருந்தால்தான் மார்பில் வலி இருக்காது. பின்புறமும் பக்க வாட்டிலும் அகற்ற மென்மையான பெல்ட் போன்ற பட்டை இருக்க வேண்டும். பருத்தியினால் ஆன உள்ளாடைகளையே அணிய வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிக சோர்வு காரணமாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பர். 20 நிமிட நடை பயிற்சியாவது உடலில் இருக்க வேண்டும்.
குளிக்கும் போது மிதமான சுடுநீரில் ஷவரில் 5 நிமிடம் இருந்தால் நல்ல ரத்த ஓட்டத்தினை ஏற்படுத்தும். தாய்பால் அடைபடாது. வாசனை சோப்புகள், நெடியான சீயக்காய், சென்ட் போன்றவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது. வியர்வை, நாற்றம், வாசனை, நெடி போன்றவை குழந்தையை பால் குடிக்க விடாமல் தடுக்கும். இரட்டை குழந்தை உடையோர் கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் இரு குழந்தைகளுக்கும் நன்கு தாய்ப்பால் கொடுக்க முடியும். இவர்களுக்கு கூடுதலான சத்துணவு தேவை. வீட்டு வேலைகளில் ஒத்துழைப்பு