25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201703311222288786 tips for women escape from Facebook Romeos SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களே பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க டிப்ஸ்..!

இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். பெண்கள் பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க என்ன வழிகளை பின்பற்றலாம் என்று பார்க்கலாம்.

பெண்களே பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க டிப்ஸ்..!
இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். இதில் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. காலையில் பேப்பரை திறந்தால் நிச்சயம் அதில் பேஸ்புக் நண்பரிடம் கற்பை இழந்த மாணவி, பேஸ்புக் காதலால் வந்த விபரீதம் அப்படி இப்படின்னு நிறைய செய்திகளை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

இவையனைத்துக்கும் முக்கிய காரணம் பெண்கள் தமக்கு அறியாத நபர்களின் Friend Requests யை ஏற்றுக்கொள்வது தான். இப்படி பெண்கள் ஏற்றுக் கொண்டவுடன் உடனே பெண்களின் இன்பாக்ஸூக்கு போய் Hi.. அப்படின்னு ஆரம்பிப்பாங்க அந்த ஆண்கள், அதுல இருந்து தான் தங்களது வேலையை இவுங்க ஆரம்பிப்பாங்க. இதோ அவுங்க என்னவெல்லாம் செஞ்சி பெண்களை கவுக்கறாங்கன்னு பாக்கலாம் வாங்க…..

இன்பாக்ஸ்ல போய் Good morning, Good night சொல்லி ஜொல்லு ஊத்துவாங்க இவுங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும் தப்பி தவறி அவுங்களுக்கு ரிப்ளே பண்ணாதீங்க பெண்களே. முடிஞ்சா அவுங்களை அன்பிரண்ட் அல்லது ப்ளாக் செய்வது உங்களுக்கு நல்லதுங்க.

நீங்க ஏதாவது பேஜ்ல கமெண்ட் பண்றிங்க அப்படின்னு வெச்சிக்குவோம் அதாவது ஒரு பேஜ்ல உங்களுக்கு விஜய் பிடிக்குமா இல்ல அஜித் பிடிக்குமா அப்படின்னு கேக்கறாங்கனு வைங்க நீங்க உங்களுக்கு புடிச்ச நடிகர் பெயரை சொல்லறீங்க அங்க. இப்ப உங்க பெயரோட அந்த கமென்ட் அந்த பேஜ்ல இருக்கும் அடுத்து அந்த பேஜ்க்கு வரும் சில நல்லவர்கள் உங்க பெயரை கிளிக் பண்ணுவாங்க அப்படி பண்ணுணா நேரா உங்க ப்ரொபைல்க்கு வந்திருவாங்க அடுத்து உங்களுக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் தாங்க கொடுப்பாங்க.

201703311222288786 tips for women escape from Facebook Romeos SECVPF

அதனால வெளியாட்கள் ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க அனுமதிக்காதீங்க உங்க நண்பர்கள் மட்டும் ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க ஒரு ஆப்ஷன் இருக்குங்க அத பாக்கலாம் வாங்க.

முதல்ல நீங்க log out பண்ற பட்டனுக்கு கீழே இருக்கும் Settings வாங்க அதுக்கப்பறம் இடதுபக்கம் Privacy அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும் அடுத்து அத கிளிக் பண்ணுங்க.

அடுத்து அதுல வரும் Who can contact me? அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும் அங்க Who can send you friend requests? ஆப்ஷன்ஸல Edit கொடுங்க இப்ப அதுல Friends of Friends ஆப்ஷனுக்கு மாத்துங்க அவ்ளோதாங்க.

அதே போல Who can see my stuff? அப்படின்னு அதுக்கு மேல ஒரு ஆப்ஷன் இருக்கும். அதையும் கிளிக் செஞ்சு Friends அப்படின்னு இருக்கற ஆப்ஷன்ஸ கிளிக் பண்ணுங்க.

இப்ப உங்க டைம் லைன்ல இருக்கற உங்க தனிப்பட்ட ஸ்டேட்டஸ் மற்றும் உங்களது போட்டோக்களை வேறு யாரும் பார்க்க முடியாது அதே போல வெளிநபர்கள் யாரும் உங்களுக்கு தேவையில்லாமல் ப்ரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பவும் முடியாதுங்க.

இதே போல் நீங்க ஒருவரது பேஸ்புக் தொடர்பு எப்போதும் வேண்டாம் அல்லது யார் என்றே தெரியாத நபர் உங்களை அடிக்கடி பேஸ்புக்ல தொடர்பு கொள்கிறாரா அவரை எப்படி தவிர்ப்பது அப்படின்னு நினைத்தால் இப்போ இடது பக்கம் இருக்கற Blocking ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.

அதில் இருக்கும் Block users ல் அவரது பெயரை தட்டுங்கள் அவர் உங்களது பிரண்ட் லிஸ்டில் இருந்தால் அவரது பெயர் வரும். இப்போது அவரை எளிதாக ப்ளாக் செய்துவிடுங்கள். உங்களது ப்ரெண்ட் லிஸ்டில் இல்லையா கவலை வேண்டாம் அதற்கும் ஒரு வழி இருக்குங்க.

அவரது ப்ரொபைலுக்கு முதலில் போங்க பிறகு அவரது URL அதாங்க மேல Facebook.com னு இருக்கும் அத அப்படியே காப்பி பண்ணுங்க. இப்ப அத கொண்டு வந்து இந்த ப்ளாக் பண்ற அந்த பாக்ஸில் பேஸ்ட் பண்ணி Block அப்படின்னு கொடுங்க. வேலை முடிஞ்சுதுங்க. இனி அவர் எப்பவுமே உங்களை தொடர்பு கொள்ள முடியாதுங்க.

மேலும் பேஸ்புக்கில் ஒருவரது ஸ்டேட்டஸ் உங்களுக்கு பிடித்துவிட்டது என்றால் அவருக்கு Friend Request கொடுக்காதிங்க. அவர சிம்பிளா Follow மட்டும் பண்ணுங்க. இதனால அவரது ஸ்டேட்டஸ்கள் உங்களுக்கு வரும் உங்களது எந்த தகவலும் அவருக்கு போகாது.

மேலும் எக்காரணத்தை கொண்டும் பேஸ்புக்கில் மொபைல் நம்பர் கேட்பவரிடம் நம்பரை கொடுத்து விடாதீர்கள். உங்களிடம் முதலில் நம்பர் வாங்குவதற்காக அப்படியே ரொம்ப காமெடியா பேசி சிரிக்க வெச்சு என்னென்னமோ பண்ணுவாங்க. அதெல்லாம் கொஞ்ச நாள் தான், அதனால் ஏமாந்து விடாதிங்க பெண்களே. அவசரப்பட்டு நம்பர் கொடுத்திடாதிங்க உஷார்.

Related posts

உங்களை அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வைக்கும் ஆபத்தான அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

nathan

பெண்களின் மிக முக்கியமான பாலியல் பிரச்சினைகள் 10.!!

nathan

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

இன்று ஏன் பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது? – காரணங்களும்… தீர்வுகளும்..

nathan

சர்க்கரை நோய் என்ன அத்தனை கொடியதா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தாமதமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள நினைக்கும் தம்பதியா நீங்க???

nathan

நெஞ்சு சளியால் அவஸ்தையா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தைகளை முத்தமிட கூடாது என பெரியவர்கள் கூறுவதற்கு இதுதான் காரணம்!

nathan

உணவை வேக வேகமா சாப்பிடுறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan