முகப் பராமரிப்பு

இந்த ஒரு ஃபேஸ் பேக் ஒரே இரவில் முகத்தை வெள்ளையாக்கும் எனத் தெரியுமா?

மாசற்ற அழகிய சருமத்தைப் பெற தான் ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். இருப்பினும், அம்மாதிரியான சருமத்தைப் பெறுவது என்பது கடினம். அதிலும் இன்றைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் சரும பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக முகப்பருக்கள், சருமத்தில் ஆங்காங்கு கருமையான படலம், கண்களைச் சுற்றி முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற அழகை பாழாக்கும் பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்க நேரிடுகிறது. இவைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், சருமத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

இங்கு ஒரே இரவில் சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை வெள்ளையாக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றி வந்தால், அழகிய மற்றும் பொலிவான சருமத்தைப் பெறலாம்.

செய்முறை #1 முதலில் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் தூசிகளை மைல்டு கிளின்சர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

செய்முறை #2 ஒரு பௌல் மற்றும் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை ஒரு ஊசியால் துளையிட்டு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின் ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரினை பௌலில் சேர்த்து, ஸ்பூன் பயன்படுத்தி நன்கு கிளறி விட வேண்டும்.

செய்முறை #4 பின்பு அதில் சிறிது ரோஸ் வாட்டர் துளிகளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #5 பிறகு அதனை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக மசாஜ் செய்யும் போது மேல்நோக்கிய திசையிலேயே மசாஜ் செய்ய வேண்டும்.

செய்முறை #6 இரவு முழுவதும் அப்படியே ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் முகத்தைப் பார்த்தால் முகம் பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

குறிப்பு * அளவுக்கு அதிகமாக வறட்சியான சருமம் கொண்டவர்கள், தினமும் இரவில் படுக்கும் முன், இந்த மாஸ்க்கை போடலாம். * எண்ணெய் பசை அல்லது காம்பினேஷன் சருமம் கொண்டவர்கள், வாரத்திற்கு 2 முறை போடலாம்.

Related posts

மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகளை விரட்டியடிக்கும் ஒரு ஒரு இயற்கை பொருள்!

nathan

ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்

nathan

உங்க முகத்தில் அசிங்கமாக மேடு பள்ளங்கள் உள்ளதா? அப்ப இத படியுங்க…………

nathan

தெரிஞ்சிக்கங்க…முகம் கழுவும் போது செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..?

nathan

பெண்களே 30 வயதானாலும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முகத்தில் முடி அரும்பி வளருகிறதா

nathan

தக்காளி பேஷியல்

nathan

சூப்பர் டிப்ஸ்! கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…

nathan