என்னென்ன தேவை?
ஸ்பாஞ்ச் கேக் – 6 (முட்டை போட்டோ, முட்டையில்லாமலோ செய்து வைத்துக்கொள்ளவும்),
ஐஸ்கிரீம் – தேவையான அளவு,
பட்டர் பேப்பர்.
எப்படிச் செய்வது?
பொதுவாக நீண்ட சதுர வடிவத்தில் கேக் செய்தால் சுருட்ட சௌகரியமாக இருக்கும். தயாரித்த கேக்கை நடுவில் ஸ்லைஸ் செய்து கீழும் மேலும் பட்டர் பேப்பரை வைத்துச் சுருட்டவும். சூடாயிருக்கும்போதே சுருட்டவும். அப்போதுதான் கேக் உடையாது. காலண்டர் சுருட்டுவது போல் வேகமாக சுருட்ட வேண்டும். முழுவதும் ஆறியபின் மேலே போட்டுள்ள பட்டர் பேப்பரை எடுத்துவிடவும். ஐஸ்கிரீமை கேக் மேலே போட்டுப் பரத்தவும்.
ஐஸ்கிரீம் உருகக் கூடாது. கெட்டியாக இருக்க வேண்டும். ஐஸ்கிரீம் பரத்தியபின், சுருட்டிய கேக்கை, ஃப்ரிட்ஜினுள் ஃப்ரீஸரில் வைத்து, சில மணி நேரம் கழித்து, ஸ்லைஸ் செய்து பரிமாறவும். சாசரில் ஒவ்வொரு ஸ்லைஸாக உடையாமல் மெதுவாக வைத்துப் பரிமாறவும்