26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
201609300750045048 nutritious carrot egg poriyal SECVPF
அசைவ வகைகள்

சத்தான கேரட் – முட்டை பொரியல்

கேரட் பொரியலில் தேங்காய்ப்பூ அல்லது வெந்த பருப்பு சேர்ப்போம். அதற்கு பதிலாக இதில் முட்டையை ஊற்றி செய்வதால் சுவையாக இருக்கும்.
தேவையானப் பொருள்கள்:

கேரட் – 1
சின்ன வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – சிறிது
முட்டை – 2
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலை பருப்பு
கறிவேப்பிலை

செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கேரட்டை துருவி கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

* கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

* இரண்டும் சேர்ந்தார் வெந்து பூப்போல் வந்ததும் இறக்கவும்.

* சுவையான கேரட் – முட்டை பொரியல் ரெடி.

* இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.201609300750045048 nutritious carrot egg poriyal SECVPF

Related posts

சிக்கன் பிரியாணி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டீப் ஃபிரை எக்

nathan

நண்டு மசாலா

nathan

சுவையான சிக்கன் குருமா!…

sangika

மட்டன் பிரியாணி

nathan

பாதாம் சிக்கன்

nathan

சிவையான நாட்டுக்கோழி வறுவல்

nathan

சுவையான இறால் குழம்பு செய்வது எப்படி?

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan