25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
01 1441100121 10tenthingstostopdoingifyouhavelowbackpain
மருத்துவ குறிப்பு

கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்!!!

இன்றைய நாட்களில் உடல்நலக் குறைபாடு என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. ஒரு வீட்டில் அனைவரும் நலத்துடன் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. சளி, காய்ச்சல் போல நீரிழிவு நோய் ஏற்படும் நிலையை எட்டிவிட்டோம்.

பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

இவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…

தவறு 1 நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டு படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.

தவறு 2 உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

தவறு 3 உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.

தவறு 4 ஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.

தவறு 5 அதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.

தவறு 6 மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.

தவறு 7 மற்றவர் பேச்சை குருட்டுத்தனமாக நம்ப வேண்டாம். பொதுவாகவே நமது ஊர்களில் அறிவுரை கூற பலர் இருக்கிறார்கள். வலி என்று கூறினால் ஆளுக்கு ஒரு அறிவுரை, மருத்துவம் சொல்லி உங்களை குழப்பிவிடுவர்கள். எனவே, சரியான மருத்துவரை கண்டு சிகிச்சை மேற்கொள்வது தான் சரியான முறை.

தவறு 8 புகை வேண்டாம். சாதரணமாகவே உங்கள் உடல் நலனை சீர்குலைக்கும் தன்மையுடைய புகை. உடல்நல குறைவின் போது அதை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளது. எனவே, உடல் நலம் சரியில்லாத போது புகைப்பதை தவிர்த்துவிடுங்கள்.

தவறு 9 நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.

தவறு 10 வலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

01 1441100121 10tenthingstostopdoingifyouhavelowbackpain

Related posts

இந்த பானங்களை குடிப்பதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

மனக்கவலையை போக்கும் மருந்தில்லா மருத்துவம்

nathan

தெரிஞ்சிக்கங்க…வெள்ளையான பற்களை மஞ்சளாக மாற்றும் உணவுப் பொருட்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரட்டை கருவை சுமப்பது பற்றிய சில கட்டுக்கதைகள்!!!

nathan

தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..

nathan

பறவைகளைத் தொடர்ந்து பார்த்தால், மன அழுத்தம் குறையுமாம்! – ஆய்வில் தகவல்

nathan

இதயத்தை இயக்கும் துணை அமைப்புகள்

nathan

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு இதய நோய்கள் வருவது எதனால்?

nathan