25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
17 1479360637 8 hair 8
தலைமுடி சிகிச்சை

தலைமுடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி?

தலையில் கையை வைத்தாலே, முடி கையோடு வருகிறதா? படுக்கையில் இருந்து எழுந்தால், தலையணையில் முடி அதிகம் ஒட்டி இருக்கா? எப்போது வீட்டைப் பெருக்கினாலும், கொத்தாக தலைமுடி கிடைக்கிறதா? அப்படியெனில் உங்கள் தலைமுடி மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100-க்கும் அதிகமான மயிர்கால்கள் உதிருமானால், உடனே தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். தலைமுடியின் வலிமையை அதிகரிக்க என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் போன்ற பலவற்றைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இப்போது நாம், தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும் ஓர் நேச்சுரல் ஹெர்பல் ஹேர் ஆயிலைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: செம்பருத்திப் பூ – 2-3 துளசி இலைகள் – சிறிது கறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 2 லாவெண்டர் எண்ணெய் – 10 துளிகள்

செய்முறை #1 முதலில் வெங்காயத்தின் தோலுரித்து, அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கறிவேப்பிலை, துளசி மற்றும் செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2 ஒரு வாணலியில் லாவெண்டர் எண்ணெயைத் தவிர்த்து, இதர அனைத்து எண்ணெய்களையும் ஊற்றி, குறைவான தீயில் சூடேற்ற வேண்டும். பின் அதில் வெங்காய சாற்றினை ஊற்றி கிளறி விட வேண்டும்.

செய்முறை #3 பின் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, செம்பருத்தி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் கிளற வேண்டும்.

செய்முறை #4 பின்பு அதில் வெந்தயத்தை சேர்த்து, அது நிறம் மாறும் வரை சூடேற்றி இறக்கி, அறைவெப்ப நிலையில் குளிர வைக்க வேண்டும்.

செய்முறை #5 இறுதியில் எண்ணெய் மணத்தை அதிகரித்து சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கிளறி, ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை தலைமுடியை பகுதிகளாகப் பிரித்து, ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி, 10 நிமிடம் விரலால் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

குறிப்பு இந்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆயில் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது குறைவதை நன்கு காணலாம். உங்களுக்கு இதுப்போன்று வேறு ஏதேனும் சக்தி வாய்ந்த ஹேர் ஆயில் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

17 1479360637 8 hair 8

Related posts

கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது

nathan

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பொடுகுதொல்லையா? யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க… இரண்டே நாளில் போயிடும்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரை பிரச்சனையை சுலபமாக போக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இயற்கை முறையில் இளநரையை நிரந்தரமாக நீக்கலாம்..!

nathan

வழுக்கைத் தலையில் முடி வளர பூண்டுகளை எப்படி பயன்படுத்துவது?

nathan

கூந்தல் உதிர்வு, பொடுகு தொல்லையா? இதோ இயற்கை முறையில் அற்புதமான தீர்வுகள்

nathan

இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா முடி உதிர்வை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்கும் …!

nathan

இளநரையா?

nathan