கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்
தேவையான பொருட்கள் :
இறால் – 250 கிராம்
அரிசி – 1 கப்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கிராம்பு – 4
இலவங்கப்பட்டை – 3
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
இஞ்சி, பூண்டு விழுது, – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
* அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கடாயை மூடி புலாவை வேக வைக்கவும்.
* மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மசாலா கலந்த இறாலை இட்டு நன்கு கிளறி விட்டு இறால் ஒரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
* புலாவ் வெந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி இலையை தூவி விட்டு வறுத்த இறாலை வைத்து அழகுப்படுத்தி பரிமாறலாம்.
* கோவாவின் பிரபலமான இறால புலாவ் ரெடி!