sl4514
சிற்றுண்டி வகைகள்

குனே

என்னென்ன தேவை?

மைதா – 2 கப்,
சர்க்கரை – 1 கப்,
நெய் – 1/4 கப்,
தண்ணீர் – 1/2 கப் அல்லது தேவைப்பட்டால் சிறிது,
பொரிப்பதற்கு ரீபைண்ட் எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மைதாவை நன்கு சலித்துப் போட்டுக் கொள்ளவும். நெய்யை அதிகம் புகைய விடமால் சூடு செய்து உருக்கி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். இப்படி எல்லா நெய்யும் தீர்ந்ததும் இந்த கலவை ரவை மாதிரி வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கெட்டியான பூரி மாவு பதம் வரும்வரை பிசைய வேண்டும். பின் ஈரத்துணியை கொண்டு 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பின்னர் மீண்டும் எடுத்து பிசைந்து பாதியாக பிரித்து முதல் பாதியில் குனே (Gune) செய்யவும். (மீதி உள்ள மாவு பாதியை மீண்டும் மூடி வைக்கவும்.) இப்போது இந்த மாவில் இருந்து சற்று எடுத்து 1/4 செ.மீ. திக்கான ரொட்டியாக உருட்டவும் அல்லது ஒரு ரொட்டிக்கு வேண்டிய மாவு எடுத்து உருட்டி ரொட்டியாக, சிறிது கெட்டியாக (சீப்பு, சீடை மாதிரி) வட்டமான பின் நீட்டு துண்டுகளாக வெட்டவும்.

விரலில் மோதிரம் சுற்றும் அளவு இருக்க வேண்டும். பின் ஒவ்வொரு துண்டு எடுத்து ரிப்பன் மாதிரி விரலின் மேல் சுத்தி, மோதிரம் மாதிரி தண்ணீர் தடவி ஒட்டிக்கொள்ளவும். எல்லா மாவையும் இதேபோல் செய்து கொண்டு மிதமான தீயில் எண்ணெயை காய வைத்து பொரித்தெடுக்கவும். அதனை பாகில் போட்டு எடுக்கவும்.

பாகு செய்வதற்கு…

சர்க்கரை – 1 கப், தண்ணீர் – 1/2 கப் விட்டு, இரண்டு கம்பி நூல் பதம் பாகு வந்ததும், பாகு இரண்டு விரலுக்கு மத்தியில் கம்பி மாதிரி வந்ததும், பொரித்த குனேவை அதில் போட்டு எடுத்து தனித்தனியாக வைத்து ஆறியதும் ஸ்டோர் செய்யவும்.sl4514

Related posts

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி சமோசா

nathan

வயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல்

nathan

நிமிடத்தில் சுவையான நேந்திரம் பழ கறி எப்படி செய்வது?

nathan

சூப்பரான பொரித்த இனிப்பு மோதகம்

nathan

சுவையான ஆம வடை

nathan

சூப்பரான சைடு டிஷ் ராஜ்மா மசாலா

nathan

சுவையான மசாலா பொரி

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan