25 C
Chennai
Wednesday, Nov 13, 2024
2674158463 2ff9034d63
சிற்றுண்டி வகைகள்

ஆடிக்கூழ்

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு ஒரு கப்

பச்சரிசி நொய் கால் கப்

தயிர் அரை கப்

சின்ன வெங்காயம் 10

பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு

உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதல் நாள் இரவே கேழ்வரகு மாவைத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் பச்சரிசி நொய்யை ஊறவையுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் ஊறவைத்த நொய்யைப் போட்டு வேகவையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் கிளறுங்கள். தீயைக் குறைத்துவைத்து வேகவையுங்கள். மாவு நன்றாக வெந்ததும் இறக்கி வையுங்கள். ஆறியதும் தயிர் ஊற்றிக் கரைத்து, அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பரிமாறுங்கள். இதை முருங்கைக் கீரைப் பொரியலுடன் சாப்பிட, அமிர்தமாக இருக்கும்.2674158463 2ff9034d63

Related posts

பிரெட் மசாலா

nathan

ஹேவ் எ ஹெல்தி அண்ட் ஹேப்பி ஃபேமிலி!

nathan

இடியாப்ப பிரியாணி

nathan

ஹமூஸ்

nathan

மீன் கட்லெட் செய்வது எப்படி ? How to Make Fish Cutlet?

nathan

ஹைதராபாத் ஸ்பெஷல் ஆனியன் சோட்டா சமோசா

nathan

சுவையான ஓட்ஸ் மிளகு அடை

nathan

சுவையான மங்களூர் போண்டா சாப்பிடனுமா? வீட்டிலேயே செய்யலாம்!

nathan

வெஜ் சமோசா செய்ய இதை பாருங்க….

nathan