25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld45821
மருத்துவ குறிப்பு

இந்தியப் பெண்களுக்கு 5 ஆலோசனைகள்

இந்த புள்ளிவிவரமே எனக்கு மனஅழுத்தத்தை கொடுக்கிறது. வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கப் பெண்களிலேயே 53 சதவிகிதம் பேர்தான் மன அழுத்தத்தில் இருப்பதாகச் சொல்கின்றனர். அப்படியிருக்கையில், நம் பெண்களுக்கு ஏன் இந்த நிலைமை? நான் இதை எதிர்க்கிறேன். உலகிலேயே நம் இந்தியப் பெண்கள் அழகானவர்கள். அம்மாவாக, சகோதரியாக, மகளாக, உடன் பணிபுரிபவராக, மனைவியாக அல்லது காதலியாக அவர்களை நாம் நேசித்து ஒவ்வொரு நாளையும் அவர்களுடனேயே கழிக்கிறோம்.

பெண்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியுமா? இந்தியப் பெண்களே… கேளுங்கள்… உங்களின் மனஅழுத்தத்தை குறைப்பதற்காக 5 ஆலோசனைகளை சொல்லப்போகிறேன்.

1. உங்களுக்கு அதிகாரமே இல்லை என்று நினைக்காதீர்கள். உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லையா? அவரை, அவரது போக்கிலேயே விட்டுவிடுங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். அவர் உங்களை விரும்ப வேண்டும் என்பதற்காக உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். அவருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், அது அவருடைய பிரச்னை.

2. பணிபுரியும் இடத்தில், ஒரு வேலையை திறமையாக செய்கிறீர்கள். உங்களது திறமையை மேலதிகாரி மதிக்கவில்லையென்றால், அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள், இல்லையேல் வேலையை விட்டு விடுகிறேன் என்று தெரியப்படுத்துங்கள். ஏனென்றால், திறமையானவர்களுக்கும், கடும் உழைப்பாளிகளுக்கும் எப்போதுமே அதிக தேவை இருக்கிறது.

3. பொருளாதாரத்தில் மற்றவர்களைச் சார்ந்திராமல், உங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உங்களை தயார்
படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளையும், நட்பு வட்டாரங்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை உங்கள் கணவர், நீங்கள் நல்ல மனைவி இல்லை என்று கூறும்போதோ, நல்ல அம்மா அல்லது நல்ல மகள் இல்லை என்று உறவுகள் சொல்லும் போதோ, உங்கள் ஊதியத்தை அதிகரித்துத் தரும்படி தைரியமாகச் சொல்லுங்கள்!

4. வேலையையும் வீட்டையும் சமமாக கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்று ஒருபோதும் வருத்தப்படத் தேவையில்லை. இது கஷ்டமாக இருந்தாலும் முடியாத காரியமில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலுக்கும் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் தேர்வு ஒன்றும் எழுதவில்லையே! 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தமும் இல்லையே! மதிய உணவுக்கு 4 வகை பதார்த்தங்கள் செய்ய வேண்டியதும் இல்லை.

ஒன்றே ஒன்று செய்தாலும் அது உங்கள் குடும்பத்தார் வயிற்றை நிரப்ப போதுமானதாகவே இருக்கும். வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னரும், நடுராத்திரி வரையிலும் நீங்கள் மட்டும் வேலை செய்தால் பதவி உயர்வு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. எந்தப் பெண்ணுக்கும் அந்த நாளின் பணிகளுக்காக பதவி எதுவும் கொடுக்கப்படுவதில்லை.

5. இது அதி முக்கியமானது. மற்ற பெண்களோடு ஒப்பீடு செய்யாதீர்கள். உங்கள் பக்கத்து வீட்டுப் பெண் ஐந்தடுக்கு டிபன் கேரியரில் சாப்பாடு தயார் செய்து கணவனுக்கு கொடுத்தனுப்பலாம். இன்னொரு பெண் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து உங்களைவிட எடை குறைத்திருக்கலாம். இதுபோன்ற பெரிய ஒப்பந்தங்களில் எல்லாம் தேவையில்லாமல் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம்.

உங்களால் முடிந்ததை, முடிந்த வகையில் சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள். மதிப்பெண் பட்டியலை பார்க்காதீர்கள். வகுப்பில் முதலாவதாக வர முயற்சிக்காதீர்கள். இவ்வுலகில் சிறந்த பெண் என்று ஒருவராலும் இருக்க முடியாது. அதற்கான முயற்சியும் செய்யாதீர்கள். அந்தப் போட்டியில் இறங்கினால் உங்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றே ஒன்றுதான். அது மன அழுத்தம்!

நான் மிகவும் அழகானவள், திறமையானவள் என்று உங்களுக்குள்ளேயே சொல்லிப் பழகுங்கள். நீங்கள் இந்தப் பூமியில் பிறந்தது, ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த அல்ல. இந்தப் பூமியில் உங்களுக்கானது என்ன கிடைக்கிறதோ அதை அனுபவிக்கவும், இந்த பூமித்தாய்க்கு நீங்கள் பிரதியுதவி செய்வதற்காக மட்டுமே ஆனது உங்கள் பிறப்பு. அடுத்த முறை இந்த கணக்கெடுப்பின் வரிசையில் இந்தியப் பெண்கள் முதல் இடத்தில் இருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை. இந்த உலகிலேயே மிக சந்தோஷமான பெண்களாக நம் இந்தியப் பெண்கள் இருப்பதையே விரும்புகிறேன். ஜஸ்ட் கூல்… ரிலாக்ஸ்… பெண்களே… என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!ld45821

Related posts

இன்னுமா உங்க குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறது? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தாய்மைக்கு தலை வணங்குவோம்

nathan

முழங்கால் மூட்டுகளில் உள்ள தசைநாண்களை வலிமைப்படுத்த சூப்பர் டிப்ஸ்…

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! ’எடீமா’ எனும் கால் வீக்கத்தால் அவதியா?

nathan

சிறுநீரக கற்களை கரைக்கும் சிறுகண்பீளை

nathan

தெரிஞ்சிக்கங்க…கிரீன் டீ-யில் இதை மட்டும் சேர்த்து குடிங்க… நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக உயருமாம்!

nathan

இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள் கிட்னி பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்…

nathan

சூப்பர் டிப்ஸ்! கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்?

nathan

மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

nathan