25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201703221533178874 thirukkai fish kuzhambu Sting Ray Fish Curry SECVPF
அசைவ வகைகள்

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு

திருக்கை மீன் முள் இல்லாதது. தேங்காய் சேர்த்து மீன் குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய் சேர்த்து திருக்கை மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு
தேவையான பொருட்கள் :

திருக்கை மீன் – 300 கிராம் (வேறு துண்டு மீன்கள் பயன்படுத்தலாம்)
தேங்காய் துருவல் – அரை கப்
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 1
புளி – சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – 3
கடுகு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* கரைத்த தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.

* குழம்பு நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்த மீன் துண்டுகளை அதில் போடவும். மீன் துண்டுகள் வேகும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.

* சூப்பரான தேங்காய் சேர்த்த திருக்கை மீன் குழம்பு ரெடி.201703221533178874 thirukkai fish kuzhambu Sting Ray Fish Curry SECVPF

Related posts

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

nathan

நெத்திலி கருவாட்டு தொக்கு

nathan

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா!

nathan

சுவையான முட்டை குருமா செய்வது எப்படி

nathan

சுவையான பாரசீக ஸ்டைல் சிக்கன் குழம்பு

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி????

nathan

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்…!

nathan