25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201703211225461034 Symptoms that suggest lung cancer in women SECVPF 1
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்

பெண்களே கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகள் தென்பட்டால் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை உறுதிபடுத்தும் அறிகுறிகளாகும்.

பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்
பெண்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு வருவதை விட சற்று மாறுபட்டது. பெண்களுக்கு வரும் புற்றுநோயானது நுரையீரலுக்கு வெளிபுறத்தில் ஏற்படும். எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகக் கடினம். மேலும் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், நுரையீரலின் வெளிபுறத்தில் இது உருவாவதால் மற்ற பாகங்களான எலும்பு, கல்லீரல் போன்றவற்றிற்கு எளிதில் பரவக்கூடும்.

எனவே, பெண்கள் அவர்களது உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும். இங்கு பெண்களுக்கான நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறி என்றால் அது உடல் சோர்வு. பொதுவாக உடல் சோர்வு என்பது அதிகப்படியான வேலை பளு மற்றும் அதிக அலைச்சலால் ஏற்படக்கூடும். ஆனால், காரணமே இல்லாமல் சோர்வு ஏற்படுகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி ஏற்பட்டால் அதனை உடனே கவனியுங்கள்.

நுரையீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தால் அது கண்டிப்பாக நரம்புகளை பாதிக்கும். அதனால் தான் முதுகு மற்றும் தோள்பட்டையில் பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.

நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி வளர்ந்தால் நம் சுவாச சுழற்சியில் தடை ஏற்படும். இதனால் கூடத் தொடர்ச்சியான இருமல் ஏற்படும், கவனித்துக் கொள்ளுங்கள்.

நுரையீரல் புற்றுநோய் பொதுவாக நெஞ்சு வலியில் இருந்து தான் ஆரம்பிக்கும். ஏனெனில், இந்த புற்றுநோய் கட்டிகள் மார்புப் பகுதியிலுள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் நெஞ்சு வலி ஏற்படக்கூடும்.

நுரையீரல் புற்றுநோயின் மற்றொரு அறிகுறி தான் இந்த கரகரப்பான குரல். எப்பொழுது நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி உருவாகிறதோ அது குரலில் ஒரு கரகரப்பு தன்மையை ஏற்படுத்தும். மேலும் இது மூச்சு விடும் போது கூட கடுமையான சத்தத்தை ஏற்படுத்தும்.

நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி ஏற்படுவதால் அது நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் நுரையீரலில் சளி அதிக அளவில் தேங்கும். மேலும், இது புற்றுநோய் கட்டியில் இருந்து இரத்தக் கசிவை ஏற்படுத்தும். அந்த இரத்தம் எச்சில் வழியாக வெளியேறக்கூடும்.

இவையெல்லாம் தான் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும். எனவே, இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் இதனை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவ பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள். நம் உடல் ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.201703211225461034 Symptoms that suggest lung cancer in women SECVPF

Related posts

உங்களுக்கு பல் கூசுதா? ரத்தம் வருதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்களுக்கு தெரியுமா இப்படியானவர்கள் பப்பாளி சாப்பிடக்கூடாது! சாப்பிட்டால் ஆபத்து!

nathan

தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்!

nathan

நிர்வாணமாக இருந்தால் இத்தனை நன்மைகளா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

nathan

உங்க உடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா? கரைக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

உங்க பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்க வேண்டாம்!இதை முயன்று பாருங்கள்..

nathan

எச்சரிக்கை! கடுகடுனு வலிக்குதா? புற்றுநோயா கூட இருக்கலாம்…

nathan

தலையில் நீர்க் கோர்ப்பு

nathan