27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
அழகு குறிப்புகள்

வேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுப்பது எப்படி, beauty tips in tamil

வேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுப்பது எப்படி, beauty tips in tamil

Description:

வேக்சிங்

தேவையற்ற முடியை நீக்கும் வழிகளில் பெண்கள் வேக்சிங் முறையை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் இது எளிய மற்றும் விரைவாக செய்யக் கூடிய காரியமாக அமைகின்றது. வலியும் அதிகம் இல்லை. ஆனால் அதை செய்த பின் பெண்கள் சிறிய கொப்புளங்கள் அல்லது பருக்களை காண முற்படுகின்றனர். பொதுவாக வலி இல்லாமல் தான் இருக்கும் இந்த பொருட்களால் சில பருக்கள் மிகுந்த வலியும் வேதனையும் தரக் கூடியதாகி விடும். இவை வருவதற்கு பல காரணங்கள் உண்டு. வேக்சிங்கில் உள்ள நச்சுத்தன்மையால் நமது சருமத்தில் கொப்புளங்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. அதை நமது சருமத்தில் போடும்

பொழுது உருவாகும் வெப்பம் அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இப்படி நடக்கலாம். அவசியம் படிக்க வேண்டியவை: வேக்சிங் பற்றி கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!! இதை தவிர்ப்பதற்கு நாங்கள் சில குறிப்புகளை உங்களுக்கு கொடுத்துள்ளோம். மென்மையாக கழுவுங்கள் வேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுக்கும் முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால், முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் கடினமான ஸ்கரப்பை சருமத்தில் பயன்படுத்தி உருவாகும் பருக்களை மேலும் கடினமாக ஆக்கி விடாமல் பார்த்துக் கொள்வது தான். வேக்சிங் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால் இது உங்களுக்கான ஒரு நல்ல குறிப்பாகும். பருத்தியின் மந்திரம் நாம் வேக்சிங் செய்த இடங்களை நல்ல பருத்தி துணியால் மூடி வைத்திருக்க வேண்டும். இவை வெயில், தூசு, மாசு ஆகியவற்றில் இருந்து உங்கள் சருமத்தை காக்கும். இதுவும் ஒரு நல்ல பராமரிப்பு குறிப்பாகும். வெளியே செல்லாமல் இருப்பது வேக்சிங் செய்தவுடன் வெளியே அல்லது வெயிலில் செல்லாமல் இருப்பது நல்லது. அல்லது அடுப்பு போன்ற சூடான இடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். இவை உங்கள் சருமத்தின் நிலையை மேலும் பாதித்து விடும். பருக்களை குணமாக்கும் மருந்துகள் இவை பொதுவாக நாம் மருத்துவரிடம் சென்று பரிசீலனை செய்து வாங்குவது கிடையாது. ஆனால் இத்தகைய மருந்துகளும் பயன் தரும். ஆயின்மென்ட் அல்லது கிரீம் ஆகியவற்றை அந்த பருக்களின் மேல் தடவி நிவாரணம் பெறலாம். ஈரப்பதம் வேக்சிங் செய்வதன் மூலம் வரும் பருக்களையும், வீக்கங்களையும் வேசலீன் அல்லது வேறு ஏதாவது நல்ல மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி பெருமளவில் குறைக்க முடியும். வேக்சிங் செய்தவுடன் மாய்ஸ்சுரைசரை தடவினால் போதும், அது இதமாகவும் பருக்களை தடுக்கவும் உதவும். வேக்சிங் செய்த பின் தடவும் திரவங்கள் வேக்சிங் செய்தவுடன் சருமம் வறண்டு விடாமல் இருப்பதற்கு தற்போதைய காலத்தில் நிறைய பொருட்கள் வந்து விட்டன. இதை நாம் நன்கு பிறரிடம் கலந்து பேசி எந்த பொருள் சிறந்தது என்று அறிந்து வாங்கி பயன்படுத்தலாம். உங்கள் பிரச்சனையை வேக்சிங் செய்பவரிடம் சொல்லுங்கள் ஒரு முறை நீங்கள் சந்தித்த பிரச்சனையை மீண்டும் வேக்சிங் செய்யப் போகும் போது உங்கள் அழகு நிபுணரிடம் தெரிவியுங்கள். நல்ல இடங்களுக்கு சென்று தரமான பொருட்களை பயன்படுத்தும் அழகு நிலையங்களுக்கு செல்லுங்கள். ஒருவேளை தடவும் மெழுகு மிகவும் சூடாக இருந்தால் அவர்களிடம் தெரிவியுங்கள். வேறு முறைகளை கையாள சொல்லலாம். இத்தகைய உணர்ச்சி அதிகம் உள்ள சருமத்திற்கு அதிக கவனம் தேவை. இவைகளை செய்து வேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுத்துவிடுங்கள்.

Related posts

மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் ……..

sangika

அடேங்கப்பா! மீண்டும் கவர்ச்சியில் இறங்கிய ஷிவானி… லைக்ஸை அள்ளிய புகைப்படம்

nathan

சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

உண்மையை உடைத்த நடிகர் ரகுவரன் மனைவி! மனைவி ரோகிணி அனுபவித்த துன்பம்..வெளிவந்த தகவல் !

nathan

நிதி நெருக்கடியில் சிக்கும் ‘சில’ ராசிகள்!

nathan

பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு…

nathan

உக்ரைன் சுற்றுலா பயணிகளிடையே கருத்து மோதல்! (Video)

nathan

எப்படி ரெண்டே நாள்ல விரட்டலாம்…அதுவும் வீட்லயே.. இந்த பருக்களை

nathan

நீங்க ஒரே ராத்திரியில இப்படி சிகப்பாக இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்…

nathan