ஒரு கவர்ச்சியான இறகு போன்ற கண் இமைகளை வரைவது, மிகவும் அழகான நகப்பூச்சை தோலில் ஈஷிக்கொள்ளாமல் மிகவும் கவனமாக தீட்டிக் கொள்வது ஒரு கலை. இவை அனைத்தையும் முற்றிலும் புதிதாக செலோ டேப்பை பயன்படுத்தி மிகவும் எளிதாக செய்து விடலாம்.
உங்களுக்கு மிகவும் சென்சிடிவான தோல் இருந்தால், செலோ டேப்பை பயன்படுத்தும் முன் ஒவ்வாமை சோதனை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் செலோ டேப்பில் உள்ள பிசின் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை தூண்டி விடும்.
தோல் மீது செலோ டேப்பை நேரடியாக ஒட்டிய பின் அதை மிகவும் விரைவாக பிய்த்து எடுக்கும் பொழுது அவை தோலின் மீது ஒரு மெல்லிய கோடுகளை உருவாக்கும்.
அவ்வாறு இல்லாமல், செலோ டேப்பை மெல்லிய துண்டுகளாக வெட்டி, அவைகளை உங்களின் தோலின் மீது இரண்டு முறை ஒட்டி பிய்த்து எடுத்தால், அதில் உள்ள பிசின் குறைந்து விடும். அதன் பிறகு செலோ டேப்பை உங்களின் முகத்தில் பயன்படுத்தலாம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செலோ டேப் அழகு குறிப்புகளை பயன்படுத்தி பயன் அடையுங்கள்.
இறகு போன்ற ஐ லைனர் : செலோ டேப்பை இரண்டு மெல்லிய கீற்றுகளாக வெட்டி அதை இரு முறை உங்களின் கைகளில் ஒட்டி நீக்கி அதில் உள்ள அதிகமான பசையை நீக்க வேண்டும்.
உங்கள் கண்களின் மூலையில் புருவங்களுக்கு இணையாக செலோ டேப்பை ஒட்டிக்கொள்ளுங்கள்.
உங்களுடைய கண்களின் உள் பக்கத்திலிருந்து இருந்து தொடங்கி, வெளிப்பக்கம் வரை, ஒரு மெல்லிய கோடை ஐ லைனரில் வரைய வேண்டும்.
வெளிப்பக்கம் மட்டும் நீங்கள் விரும்பிய வடிவில் ஒரு தடித்த வில் வடிவ கோடு வரைய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் உலர விடுங்கள். அதன் பின் நீங்கள் ஒட்டிய செலோ டேப்பை மிக விரைவாக நீங்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கு மிகவும் சுத்தமான கூர்மையான இறகு வடிவ கண் லைனர் கிடைத்திருக்கும்.
பிசிறு இல்லாத நகப் பூச்சு : சிறிய கீற்றுகளாக செலோ டேப்பை வெட்ட வேண்டும். உங்களின் நகம் முடியும் இடம் மற்றும் நகங்களின் இரு பக்கங்களிலும் வெட்டி வைத்த செலோ டேப்பை ஒட்ட வேண்டும்.
உங்கள் கை விரல்கள் மற்றும் கால் விரல்கள் அனைத்திலும் இதைச் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கம் போல் உங்களின் நகங்களின் மீது நகப்பூச்சை பூச வேண்டும். நகப்பூச்சு உலர்ந்த பின்னர் செலோ டேப்களை விரைவாக நீக்க வேண்டும்.
நக அலங்காரம் : ஒரு தடித்த வெள்ளை நிற செலோ டேப்பை எடுத்து அதை நீங்கள் விரும்பும் வடிவத்தில் வெட்ட வேண்டும்.
நீங்கள் வெட்டிய டேப்பை ஒட்டும் முன்னர் உங்களின் நகத்தில் உள்ள அடிப்படை நிறம் உலரும் வரை காத்திருக்க வேண்டும்.
இப்பொழுது டேப்பை உங்களின் நகத்தில் ஒட்டி நீங்கள் விரும்பும் ஓவியத்தை வரையுங்கள். வண்ணங்கள் சிதறுவதைத் தவிர்க்க பெயிண்ட் உலரும் வரை காத்திருந்து அதை உடனடியாக நீக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கு அழகிய நக அலங்காரம் கிடைத்து விட்டது.
நெயில் பாலிஷ் தரத்தை சரிபார்க்கலாம் : நகப் பூச்சு அல்லது லிப் ஸ்டிக் போன்றவை கொள்கலத்தின் உள்ளே இருக்கும் பொழுது ஒரு நிறமாகவும் அதை வெளியே எடுக்கும் போது வேறொரு நிறமாகவும் தெரியும்.
நீங்கள் புதிதாக ஒரு நகப் பூச்சு மற்றும் லிப் ஸ்டிக் வாங்கும் பொழுது அது உங்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள செலோ டேப்பை உபயோகிக்கலாம்.
ஒரு செலோ டேப்பை வெட்டி எடுத்து அதன் மீது சிறிது வண்ணத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அதை உங்களின் உதடு அல்லது நகத்தின் மீது வைத்து, புதிய பொருட்கள் உங்களுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.
புருவம் வடிவமைக்க : உங்களுடைய புருவங்களை வடிவமைக்கும் போது, நீங்கள் வண்ணங்களை நெற்றியின் மீது தீட்டிக் கொள்ளும் சந்தர்ப்பம் மிக அதிகம். அதிலிருந்து உங்களை காத்துக் கொள்ள செலோ டேப்பை பயன்படுத்தலாம்.
உங்கள் கையில் செலோ டேப்பை ஒட்டி அதை நீக்கி அதிலுள்ள அதிகமான பிசினை நீக்க வேண்டும்.
அதன் பின்னர், டேப்பை உங்களின் வில் வடிவ புருவத்தின் வளைவுகளின் கீழ் ஒட்டவும். அதன் பிறகு உங்களின் புருவத்தை தீட்டவும்.
உங்களின் புருவத்தை தீட்டி முடித்த பின்னர், மெதுவாக செலோ டேப்பை நீக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கு கூர்மையான சுத்தமான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட புருவம் கிடைத்து விட்டது.
கண் மேக்கப்பிற்கு : உங்கள் ஐ ஷேடோ சில நேரங்களில் சீரற்ற முறையில் உங்களின் கன்னங்களின் மீது ஒட்டிக் கொள்ளலாம். அப்பொழுது உங்களின் ஒப்பனையை பாதிக்காமல் சீராக்குவது இயலாத காரியம். அதிலிருந்து உங்களை காப்பாற்ற செலோ டேப் இருக்கின்றது.
முன்னர் குறிப்பிடப்பட்ட முறையை பயன்படுத்தி செலோ டேப்பை இரு முறை ஒட்டி நீக்கி அதிலுள்ள அதிகப்படியான பிசினை நீக்க வேண்டும்.
செலோ டேப்பின் ஒட்டும் பக்கம் வெளிப்புறம் இருக்குமாறு டேப்பை உங்களின் கை விரலில் சுற்றி அதன் பின்னர் மெதுவாக ஒழுங்கற்ற அடித்தள தீற்றல்களை ஒற்றி எடுக்க வேண்டும்.
இப்பொழுது உங்களின் ஒப்பனையை கலைக்காமல், உங்களின் சீரற்ற அடித்தளத்தை நாம் சீராக்கி விட்டோம்.