கூந்தல் இயற்கையாக உதிர்வதும் வளர்வதும் நடக்கக் கூடியது. ஆனால் கற்றையாக உதிர்ந்து கொண்டிருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே விட்டால் சொட்டையாகவும் வாய்ப்புகள் உண்டு.
அந்த மாதிரி சமயங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
எண்ணெய் மசாஜ் : எண்ணெய் மசாஜ் உங்கள் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. வேர்க்கால்களை பலப்படுத்தும். எவ்வாறு உங்கள் கூந்தலுக்கும் வேர்க்கால்களுக்கும் போஷாக்கு அளிக்கலாம் என பார்க்கலாம்.
ஸ்டெப் – 1 அரை கப் ஆலிவ் எண்ணெயை லேசாக சூடு படுத்தி ஒரு பஞ்சினால் ஆலிவ் எண்ணையை முக்கி ஸ்கால்ப்பில் தடவுங்கள். இளஞ்சூடு தலையில் படுவது போலிருக்க வேண்டும். பிறகு மசாஜ் அழுத்தமாக மசாஜ் செய்யுங்கள்
ஸ்டெப் – 2 ஒரு மணி நேரம் கழித்து ஷாம்புவினால் தலைமுடியை அலசவும். ஆலிவ் எண்ணெயில் உள்ள விட்டமின் ஈ மற்றும் மற்ற தேவையான மினரல்கள் இருப்பதால் அவை கூந்தலின் வேர்க்கால்களை பலப்படுத்துகிறது.
வெங்காயச் சாறு : வெங்காயத்தை பொடியாக வெட்டி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றில் பஞ்சினால் நனைத்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
வெங்காயச் சாறு : ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வெங்காயத்திலுள்ள சல்ஃபர் கெரட்டின் உற்பத்தியை பெருக்குகிறது. சஃபர் வெங்காயத்தில் உள்ள அளவிற்கு மற்ற பொருட்களில் இல்லை. வாரம் ஒருமுறை இந்த குறிப்பை பயன்படுத்தும்போது முடி நன்றாக செழித்து வளரும்.
முட்டை : முட்டையை உடைத்து அதில் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் தேங்காய் என்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவ்ற்றை கலந்து நன்றாக க்ரீம் போல் அடித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். வாரம் இரு முறை செய்யலாம். அடர்த்தியாக முடி வளர ஆரம்பிக்கும்.