26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
கால்கள் பராமரிப்பு

மழைக்காலத்தில் பாத பராமரிப்பு

இதோ இதோ என்று மழைக்காலம் வந்துவிட்டது. வாட்டிய வெயிலிருந்து நம்மை காப்பாற்றிவிட்டது. முழுவதுமாக அதை நினைத்து சந்தோஷப்படுவதற்குள் மழைக்காலத்திற்கென்றே உள்ள சில பிரச்னைகளும் கூடவே வந்துவிடும். அதில் முக்கியமானது சேற்றுப்புண். ஈரத்தினால் ஏற்படும் பூஞ்சை பேக்டீரியாக்களால் இவை உருவாகும். இப் பிரச்னை மட்டுமின்றி வேறு சில பிரச்னைகளும் வராமலிருக்க பாதத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சின்ன சின்ன வழிமுறைகள் தான். பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாக துடைக்கவும்.

கால் நகங்களை வெட்டுங்கள் கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். சரியான காலணிகளை அணியுங்கள் ஷூக்கள் போட்டு மழை நீரில் நடக்கும் போது ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் போடுவதைத் தவிருங்கள்.

உங்கள் கால்களுக்கு பெடிக்யூர் செய்வது இந்த மழைக் காலத்தில் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். காலணிகளை சுத்தம் செய்யுங்கள் கால்களை சுத்தமாக வைத்திருப்பது போல, நம் காலணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். வீடு திரும்பி, கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் கழுவி நன்றாக உலர வைக்கவும்.111434 feet

Related posts

சிலருக்கு பித்தவெடிப்பு ஏற்படக்காரணம் என்ன?

nathan

குதிகால் வலியை விரட்டும் வெந்நீர்

nathan

நோய்களின் அறிகுறியான கால் வீக்கம்!

nathan

குதிகால் வெடிப்பை குணமாக்க வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சரிசெய்யலாம்!..

sangika

நடக்கும் போது வேதனையைத் தரும் குதிகால் வெடிப்பை போக்க சில டிப்ஸ்.

nathan

பாத வெடிப்பு நீங்க

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய பாதத்தை மிருதுவாக்கும் ஸ்கரப்

nathan

பாதங்களின் நலனில் முக்கியத்துவம் செலுத்துவதும் அவசியம்

nathan

உங்க பாத வெடிப்புகளை ஒரு சில நாட்களில் போக்கிடும் பாட்டி வைத்தியங்கள்!! முயன்று பாருங்கள்

nathan