24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201703160907082483 Nuts fruits Mini Pan Cake SECVPF
கேக் செய்முறை

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் மினி பான் கேக்

காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கியமான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் இந்த நட்ஸ் மினி பான் கேக் செய்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் மினி பான் கேக்
தேவையான பொருட்கள் :

மைதா – 2 கப்,
சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,
பொடித்த டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் – அரை கப்,
கிவி, ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் என விருப்பமான பழங்கள் (விருப்பமான வடிவத்தில் நறுக்கியது) – 1/2 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
பால் – 1 1/2 கப்,
தயிர் – 1/4 கப்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க…

பொடித்த பழங்கள், நட்ஸ் – தேவைக்கு.

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் மைதா, பால், சர்க்கரை, பேக்கிங் பவுடர், சோள மாவு, தயிர், 1 சிட்டிகை உப்பு, 1 டீஸ்பூன் வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கி வைக்கவும்.

* 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நான்-ஸ்டிக் பேனை சூடாக்கி, முதலில் ஒரு சிறிய பான் கேக்கை ஊற்றவும். மெல்லியதாக (அடை போல) பின் அதன் மேல் பொடித்த நட்ஸையும் டிரை ஃப்ரூட்ஸையும் சிறிது தூவி, அதற்கு மேல் மீண்டும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். மிதமான தீயில் மெதுவாக வேக வைக்கவும்.
* சுற்றிலும் வெண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு சிறிது வெண்ணெய் விட்டு எடுத்து அதன் மேல் பொடித்த ஃப்ரெஷ் பழங்கள், நட்ஸால் அலங்கரித்துப் பரிமாறவும்.

* சூப்பரான நட்ஸ் மினி பான் கேக் ரெடி.

* ஃப்ரெஷ் க்ரீம், தேன், சாக்லெட் சாஸுடன் பரிமாறலாம்.201703160907082483 Nuts fruits Mini Pan Cake SECVPF

Related posts

சாக்லெட் கப்ஸ்

nathan

பேரீச்சப்பழ கேக்/ Date cake/ டேட்ஸ் கேக்

nathan

பாதாம் கேக்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக்

nathan

கோதுமை வாழை கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan

குழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்

nathan

பனீர் கேக்

nathan

மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங்

nathan