28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201703161119472131 kuthiraivali kothamalli rice kuthiraivali coriander rice SECVPF
சைவம்

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

மற்ற சிறு தானியங்கள் மற்றும் தானியங்களைக் காட்டிலும் குதிரைவாலியில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இன்று குதிரைவாலி கொத்தமல்லி சாதம் செய்முறையை பார்க்கலாம்.

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி [ Barnyard millet ] – அரை கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 6 பல்
கொத்தமல்லி தழை – அரை கட்டு
மிளகு – சீரகபொடி – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க :

சீரகம் – அரை ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை :

* பூண்டு, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குதிரைவாலி அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வெயிட் வைத்து 3 விசில் வரும் வரை அதிக தீயில் வேக விடவும். பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும். விசில் போனவுடன் குக்கரை திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து ஆற விடவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து மீதமுள்ள நல்லெண்ணெயை விட்டு சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அதில் குதிரைவாலி சாதத்தை போட்டு அதனுடன் நெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

* சத்தான குதிரைவாலி கொத்தமல்லி சாதம் ரெடி.

* விருப்பமான பொரியல் அல்லது தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.

குறிப்பு :

கொத்தமல்லியை அரைத்தும் இதில் சேர்க்கலாம். 201703161119472131 kuthiraivali kothamalli rice kuthiraivali coriander rice SECVPF

Related posts

வெஜிடேபிள் கறி

nathan

உருளை வறுவல்

nathan

சிம்பிளான… பாலக் பன்னீர் ரெசிபி

nathan

பனீர் 65

nathan

சத்தான பாலக் தயிர் பச்சடி

nathan

சத்தான சுவையான பருப்பு திணை கிச்சடி

nathan

சுரைக்காய் கூட்டு

nathan

பீட்ரூட் ரைஸ்

nathan

சுவையான பன்னீர் குருமா செய்வது எப்படி

nathan