28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201703161312229208 varagu tomato rice Varagarisi Thakkali Rice kodo millet SECVPF
சைவம்

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்

வரகு அரிசியில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று வரகு அரிசியை வைத்து சத்தான சுவையான தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான வரகரிசி தக்காளி சாதம்
தேவையான பொருட்கள் :

வரகரிசி – 1/2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 1
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளியை அரைத்து கொள்ளவும்.

* வெங்காயத்தை நீளமாக வெட்டி கொள்ளவும்.

* வரகரிசியை களைந்து கல் போக அரித்து தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

* அத்துடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

* பின்னர், தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வரகரிசி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

* சுவையான வரகரிசி தக்காளி சாதம் ரெடி….201703161312229208 varagu tomato rice Varagarisi Thakkali Rice kodo millet SECVPF

Related posts

பாகற்காய் பொரியல்

nathan

கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு

nathan

வாழைப்பூ – முருங்கை கீரை வதக்கல்

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு – 65

nathan

தேங்காய்ப் பால் சாதம்

nathan

சுவையான சிவப்பு முள்ளங்கி மசாலா

nathan

பூண்டு நூடுல்ஸ்

nathan

பொட்டேடோ வெட்ஜஸ்-potato veggies

nathan