24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1466853440 9261
சிற்றுண்டி வகைகள்

மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள்

1. அவல் போண்டா

* ஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

2. பேபி கார்ன் 65

* பூண்டு, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.

* பிறகு, ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* பின், அதில் பேபி கார்ன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த பேபி கார்னை ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

3. சென்னா மசாலா

* சென்னாவை எட்டு மணிநேரம் ஊறவைத்து கூக்கரில் வேகவைக்கவும்.

* தக்காளி, வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி, சீரகம் ஆகியவற்றை தனியாக அரைத்து கொள்ளவும்.

* இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கவும், பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும்.

* மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த சுண்டல் சேர்த்து எல்லா பொருட்களும் நன்றாக சேரும்வரை வதக்கவும்.

* சாட் மசாலா, சென்னா மசாலா பவுடர் மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். பரிமாறும் போது ஒரு துண்டு எலுமிச்சைபழம் வைக்கவும்.1466853440 9261

Related posts

டிரை கிரெய்ன் ரொட்டி & பரங்கிக்க்காய் அடை! ஈஸி 2 குக்!!

nathan

அரிசி ரொட்டி

nathan

ஃபலாஃபெல்

nathan

இலை அடை

nathan

பீட்ரூட் சப்பாத்தி

nathan

சிதம்பரம் கொத்சு

nathan

ஜவ்வரிசி தோசை

nathan

சுவையான நூடுல்ஸ் பக்கோடா

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை

nathan