201703141023042450 Cabbage peas rice SECVPF
சைவம்

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்

குழந்தைகள் மதியம் பள்ளியில் சாப்பிட மிகவும் சத்தானது முட்டைகோஸ் – பட்டாணி சாதம். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முட்டைகோஸ் – பட்டாணி சாதம்
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி சாதம் – 4 கப்
முட்டை கோஸ் – 400 கிராம்
வெங்காயம் – 1
பச்சை பட்டாணி – 50 கிராம்
குடமிளகாய் – 1
எண்ணெய் – 2 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
புதினா – சிறிது
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
சிகப்பு மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி


செய்முறை :

* முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர், பச்சைப்பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர், மெல்லியதாக துருவிய முட்டை கோஸை சேர்த்து நன்கு மொற மொறவென வரும்வரை வதக்கவும் ( குழைய கூடாது).

* பின்னர் அதில் உப்பு, சிகப்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

* பின்னர், வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அத்துடன் மிளகுத்தூள், நெய், புதினா இலைகளைத் தூவி சாதம் உடையாதவாறு பக்குவமாக கிளறி இறக்கவும்.

* முட்டை கோஸ் – பட்டாணி சாதம் தயார். 201703141023042450 Cabbage peas rice SECVPF

Related posts

கோதுமை ரவை புளியோதரை

nathan

பாகற்காய் தக்காளிப் புளிக்கறி

nathan

பாசிப்பருப்பு வெங்காய தோசை

nathan

சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்

nathan

கருணைக்கிழங்கு மசியல்

nathan

வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

தேங்காய் சாதம்

nathan

வாழைப்பூ துவட்டல்

nathan

கமகமக்கும் வெண்டைக்காய் சாம்பார்

nathan