26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
சிற்றுண்டி வகைகள்

சுவையான… பாசுந்தி ரெசிபி

பாசுந்தி என்றதும் ஏதோ கஷ்டமான ஓர் இனிப்பு வகை என்று நினைக்க வேண்டாம். இது பாயாசம் போன்றது. ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு இதனை அவ்வப்போது செய்து கொடுத்தால், அதில் சேர்க்கப்படும் நட்ஸ்களில் இருக்கும் சத்துக்கள் கிடைத்து, குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் இது பண்டிகைக் காலங்களில் வீட்டில் செய்தால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த பாசுந்தியை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து வீட்டில் செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கொழுப்பு நிறைந்த பால் – 1 லிட்டர் கண்டென்ஸ்டு மில்க் – 1/2 கப் சர்க்கரை – 3-4 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) பிஸ்தா – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, தொடர்ந்து கிளறி விடவும். அப்படி தீயைக் குறைத்து கொதிக்கவிடும் போது, அதில் பாலாடை உருவாக ஆரம்பிக்கும். அந்த பாலாடையை தூக்கி எறியாமல், அப்படியே தொடர்ந்து பால் ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பௌலில் ஊற்றி குளிர வைத்து, பின் ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் பரிமாறினால், பாசுந்தி ரெடி!!!

Related posts

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

nathan

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

பூண்டு ஓம பொடி

nathan

மேத்தி பைகன்

nathan

சத்தான சுவையான கேழ்வரகு ரவா தோசை

nathan

கோயில் வடை

nathan

சத்தான கம்பு – பச்சைப்பயறு புட்டு

nathan

கீரை புலாவ்

nathan

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

nathan