26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
சரும பராமரிப்பு

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதனால் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள்!!!

நீங்கள் மற்ற பெண்களை போல மிக நீளமான கூந்தலை பெற வேண்டும் என கனவு காண்பவரா? உங்கள் முடி எளிதில் உடையக்கூடியதாகவும், வலிமை இல்லாததாகவும் உள்ளதா? அதனால் நீங்கள் உங்கள் கூந்தலை குதிரை வால் அளவில் மாற்றியுள்ளீர்களா? இதனால் கூந்தல் பராமரிப்பிற்கு மெனெக்கெட வேண்டியுள்ளதா?

நீண்ட, ஆரோக்கியமான, மற்றும் வலிமையான கூந்தலே ஒவ்வொரு பெண்ணின் கனவாகும். மக்கள் தங்களை அழகாக காட்ட எந்த தூரத்திற்கும் செல்ல தயாராக உள்ள காலம் இது. ஆரோக்கியமும், ஸ்டைலான தோற்றமும், கூந்தலை சீர்படுத்துவதில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி விட்டது!

நம் கூந்தலை வலிமையாகவும் பளபளப்பாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கு வேண்டியதை போல் நம் கூந்தலை அழகாக்க ஏதாவது பொருள் உள்ளதா? ஆம், உள்ளது! அது வேறு எதுவுமில்லை, உங்களுக்கு தெரிந்த சீயக்காயே! வாங்க அதைப் பற்றி சற்று பார்க்கலாம்.

ஏன் கூந்தலுக்கு சீயக்காய் பயன்படுத்த வேண்டும்?

சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக ஆசிய துணைக்கண்டத்தில் புகழ்பெற்று விளங்கும் இது, மற்ற கண்டங்களிலும் கூட பரவியுள்ளது. அசாசியா கோன்சின்னா மரத்தின் காயில் இருந்து செய்யப்படும் சீயக்காய், கூந்தலுக்கு சிறந்த க்ளின்ஸராக விளங்கும். எங்கு வேண்டுமானாலும் வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக்கூடியவை தான் சீயக்காய் தூள். இது மிகவும் மலிவான ஒன்றும் கூட.

சீயக்காய் நன்மைகள்

சீயக்காய் உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்திற்கும் சேர்த்து பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

சிறந்த சுத்திகரிப்பான்

கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து, உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.

முடிக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும்

பலர் இன்னும் கூந்தலுக்கு சோப்புகளை தான் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் தலைச்சருமத்தை வறட்சியாக்கி, செபோர்ஹெயிக் டெர்மட்டிட்டிஸ் எனப்படும் அழற்சி நிலையை ஏற்படுத்துவதால், அவை கூந்தலுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆனால் சீயக்காயிலோ பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது.

கண்டிஷனர் தேவையில்லை

உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்

வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும்

இது மற்ற மூலிகைகளை மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.

முடியின் நிறத்தை தக்க வைக்கும

் கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும்.

பொடுகை தடுக்கும்

பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது. பொடுகிற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்றால் தற்காலிக முடி உதிர்தல் ஏற்படும்.

02 1433221757 9 homemadeshikakaipowder

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அழகாகவும் அட்டகாசமாகவும் இருக்க ‘இத’ செஞ்சா போதுமாம்…!

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

இந்த அழகு பொருட்கள்தான் உங்கள் சருமத்தை மோசமடையச் செய்யும். கவனமாக இருங்கள்!

nathan

டாட்டூ மோகம் ஓர் எச்சரிக்கை பதிவு

nathan

முகம் பளபளப்பாக, கண்கள் அழகு பெற, தோலின் நிறம் பொலிவு பெற……

sangika

சருமம் காப்பது சிரமம் அல்ல!

nathan

உடலில் உள்ள கருமையை உடனே போக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan

சருமம் பற்றிய குறிப்புகள்..

nathan