29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
potato
சிற்றுண்டி வகைகள்

உருளைக் கிழங்கு அப்பம்

உருளைக் கிழங்கு அப்பம் என்னென்ன தேவை?

உருளைக் கிழங்கு – 4

பொட்டுக்கடலை மாவு – 100 கிராம்

பச்சரிசி மாவு – 200 கிராம்

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 3

தேங்காய்த் துருவல் – அரை கப்

மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

எண்ணெய், உப்பு – தேவைக்கு

எப்படிச் செய்வது?

உருளைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து, தோல் உரியுங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரையுங்கள். அரைத்த விழுதுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், பச்சரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்குக் கரையுங்கள். வேகவைத்த உருளைக் கிழங்கையும் அதனுடன் சேர்த்து நன்றாகக் கரையுங்கள். அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கரைத்த மாவைக் கரண்டியால் எடுத்து ஊற்றுங்கள். மிதமான தீயில் வேகவைத்து, இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள். இதனுடன் மயோனீஸ் சாஸ் தொட்டுக் கொண்டுச் சாப்பிடலாம்.potato

Related posts

சத்தான சுவையான சோள அடை

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

ஹரியாலி பனீர்

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan

உருளைக்கிழங்கு ரோல்

nathan

ஓமவல்லி இலை பஜ்ஜி

nathan

கரும்புச் சாறு கீர்

nathan

முட்டை கோதுமை நூடுல்ஸ்

nathan

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan