24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்

ld697

 

கோடையில் வெயிலில் அதிகம் சுற்ற நேருவதால், சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் அதிகரித்து, சருமத்தின் நிறம் மங்க ஆரம்பிக்கும். சிலருக்கு சருமம் கருப்பாகிவிடும். ஆகவே பலர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள். அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..? அதை போக்க இதோ சில வழிகள்!!! அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க கண்ட கண்ட க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் வேறு சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இங்கு வெயிலினால் மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சில ஃபேஸ் பேக்குகள்

கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சி செய்து பாருங்கள். இதனால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழத்தின் தோல் பொடியை போட்டு, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, வெயில் படும் இடங்களான முகம் மற்றும் கைகளில் தடவி ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதுடன், அதில் உள்ள பால் சருமத்தை வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், சரும கருமையைப் போக்க, எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை தோலை பொடி செய்து, அதில் பால் சேர்த்து கலந்து, பாதிப்படைந்த இடங்களில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். தயிர் மற்றொரு சிறப்பான அழகுப் பராமரிப்பு பொருள்.

ஏனெனில் தயிரை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், அது சருமத்தில் உள்ள கருமையை போக்குவதுடன், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளும். அக்காலத்தில் இருந்து சருமத்தின் நிறத்தை அதிகரிக்க குங்குமப்பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே அத்தகைய குங்குமப்பூவை பாலில் சேர்த்து கலந்து, அதனை தினமும் சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். வேண்டுமானால், பாலுக்கு பதிலாக தயிரை சேர்த்தும் செய்யலாம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் பொருட்களில் மஞ்சள் ஒரு சிறப்பான பொருள். அதற்கு மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெய் அல்லது பால் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். வெள்ளரிக்காய்க்கு கூட சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் குணம் அதிகம் உள்ளது. அதற்கு வெள்ளரிக்காயை அரைத்து, அதனை சருமத்தில் தடவி ஊற வைத்து, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தக்காளியிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே அந்த தக்காளியை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ சருமத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

Related posts

பெண்களே உங்க கன்னங்கள் அழகாக ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா? இதோ பத்து பயனுள்ள அழகு குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை போக்க சில அசத்தலான வழிகள்!!!

nathan

முயன்று பாருங்கள்..சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் ஐஸ்கட்டியை கொண்டு..?

nathan

அடேங்கப்பா! அஜித்தின் மனைவி ஷாலினி தங்கையுடன் மாடர்ன் உடையில்…

nathan

பிக்பாஸ் அல்டிமேட்.. முதல் நாளிலேயே பாலாஜியை நாமினேட் செய்த சினேகன்!

nathan

அழகு குறிப்புகள் சரும பிரச்சனைகளுக்கு விரைவில் நிவாரணம்

nathan

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்

nathan

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன….

sangika