25.6 C
Chennai
Thursday, Nov 14, 2024
abdominal crunch 3
உடல் பயிற்சி

அப்டாமினல் க்ரன்சஸ்

பெரும்பாலான பெண்கள் 30 வயதை நெருங்குவதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். தாய்மை, ஹார்மோன் மாற்றம், உணவு போன்ற காரணங்களோடு போதிய உடற்பயிற்சி இல்லாததும் கொழுப்பு அளவு அதிகரித்து, தசைகள் தளர்வு பெற முக்கியக் காரணம்.
சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் த‌சைகளை இறுக்கி, உடலை ஃபிட்டாக்கும். பயிற்சியாளரின் துணையுட‌ன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது நல்ல ப‌லனைத் தரும். அப்டாமினல் க்ரன்சஸ் (Abdominal Crunches) பயிற்சி வயிற்சி பகுதியை வலுவடையச்செய்யக் கூடியது.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வயிற்று பகுதி அழகான வடிவம் பெறும். இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டிகளை மடக்கியபடி வைக்க வேண்டும். கைகளை மடித்து, தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். கால்களை நகர்த்தாமல், உடலை முன்புறமாக உயர்த்த வேண்டும். எந்த அள‌வுக்கு முடியுமோ அந்த அள‌வுக்கு உடலை முன்னோக்கிக் கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி 25 முறைகள் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க வேண்டும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதி தசைகள் இறுகி, வலுவடையும். முதுகு வலி, குறையும். வயிறு அழகான வடிவம் பெறும்abdominal crunch 3

Related posts

பெண்களின் பின்னழகை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சிகள்

nathan

கர்ப்ப காலத்தில் வரும் முதுகு வலி, கால் வீக்கத்தை போக்கும் யோகா

nathan

சூப்பர் டிப்ஸ்! இயற்கையான முறையில் உங்களது உயரத்தை வேகமாக அதிகரிப்பது எப்படி?

nathan

நடைப்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

nathan

தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி

nathan

ஜிம்மில் அதிகமாக செய்யும் உடற்பயிற்சியால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

மனதுக்கும், உடலுக்கும் அமைதி தரும் சவாசனம்

nathan

ஜிம்முக்குப் போக சரியான வயசு

nathan

எளிய பயிற்சிகள்… நிறைய நன்மைகள்

nathan