மூட்டுவலியை குறைக்க சிலாஜித், குக்குலு, குறுந்தொட்டி வேர், கருங்குறிச்சி வேர், ஆமணக்கு வேர், சுக்கு, தேவதாரம், நொச்சி வேர், பூண்டு, வாத நாராயணன், வாத மடக்கி, முதியார் கூந்தல் போன்ற மருந்துகள் பயன்படும்.
மூட்டு வலியை போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்
மூட்டு வலி…
முதுமையை நெருங்கும் பலருக்கும் ஏற்படும் உடல் தொல்லைகளில் ஒன்று. ஆண்கள் குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க முடியாமல் சிரமப்படுவார்கள். பெண்கள் நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுவார்கள்.
நமது நாட்டில் இன்று மூட்டு தேய்மானம் மிக அதிகமாக காணப்படுகிறது. முதுமை, உராய்வு, அதிக வேலைகளை இழுத்து போட்டு செய்வது போன்றவற்றால் மூட்டுகளில் தேய்வு நிலை உண்டாகிறது.
மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் இடையே ரப்பரை போன்ற ஒரு பொருள் உள்ளது. ஆயுர்வேதம் இதை ஸ்லேஷ்மதர கலா என்று அழைக்கிறது. இது இருப்பதால்தான் ஒரு எலும்பின் மேல் இன்னொரு எலும்பு நகர்ந்து போக முடியும். இந்த எலும்பு சவ்வு தேயும் போது எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயும். இதனால் வலி, வீக்கம், தசை இறுக்கம் போன்றவை உருவாகும்.
தேய்மானம் முற்றும்போது புதிய எலும்புகள் மூட்டை சுற்றி முளைக்கும். தசை நார்களும், தசைகளும் பலவீனம் அடையும். 50 வயதுக்கு மேல் இது அதிகமாக காணப்படும். சில குடும்பங்களில் மரபு சார்ந்து வரலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படலாம்.
இடுப்பு மூட்டு, கணுக்கால் மூட்டு, பாத மூட்டு, குதிகால் மூட்டுகள் தேய்வடையும். எலும்பு முறிந்தாலும் தேய்வடையலாம். மண்டியிட்டு இருத்தல், சம்மணம் போட்டு உட்காருதல், அதிகமாக நடப்பது போன்றவை தேய்மானத்தை சற்றே கூட்டும்.
ஹீமோபிலியா நோய் உள்ளவர்கள், மூட்டுகளுக்கு ரத்தவோட்டம் இல்லாத நிலை உள்ளவர்கள், முடக்கு வாதம் உள்ளவர்கள் ஆகி யோருக்கு கூடுத லாக தேய்மானம் வரலாம். 70 வயது ஆகிவிட் டால் அவர்களில் மூட்டு தேய்மானம் இல்லாதவர் களே இருக்க முடியாது.
தொடரும் வலிக்கு காரணம்:-
உடற்பயிற்சி செய்தால் வலி அதிகரிக் கும். சில நேரங்களில் சத்தம் உண்டாகும். காலை வேளையில் மூட்டு இறுக்கம் வரும். இது 30 நிமிடம் வரை காணப்படும். செயல்பாடுகள் தொடங்க, தொடங்க இது சற்றே மாறும். வேலை செய்தால் வலி காணப்படும். ஓய்வெடுத் தால் வலி குறையும். நோய் முற்றிவிட்டால் ஓய்வெடுத்தாலும் வலி இருக்கும்.
எக்ஸ் ரே மூலம் இதை நாம் தெளிவாக காணலாம். ஒரு சில நேரங்களில் மூட்டுகளில் நீர் காணப்படும். மூட்டை அசைக்க முடியாது. தொட்டால் வலிக்கும். எக்ஸ் ரேயில் பார்த்தால் மூட்டுகளின் இடைவெளி குறைந்திருப் பதை பார்க்கலாம். புதிய எலும்புகள் உருவாகி இருப்பதையும் காணலாம். இது முழுமையாக குணமாகாது. ஆனால் தடுத்து நிறுத்த முடியும். மிகவும் முற்றிவிட்டால் அறுவை சிகிச்சைதான் செய்து கொள்ள வேண்டும். வலியை குறைத்தல், மூட்டை சுற்றியுள்ள தசைகளை வலிவூட்டுதல் போன்றவைகளை செய்யலாம்.
ஆயுர்வேதத்தில்…
ஆயுர்வேதத்தில் மூட்டு கபத்தின் ஸ்தானமாக இருக்கிறது. அங்கு வாதத்தால் தேய்வு வருகிறது. எனவே முதலில் கொட்டம் சுக்காதி லேபம், கிரக தூமாதி லேபம் போன்றவற்றை செய்வார்கள்.
பின்பு தான்வந்தர தைலம், பிரபஞ்சனம் தைலம், மஹா மாஷ தைலம் போன்றவற்றை இட்டு இலை கிழி, எலுமிச்சை கிழி, நாரத்தங்காய் கிழி போன்ற கிழிகளை கொடுப்பார்கள். பின்பு பேதிக்கு மருந்து கொடுப்பார்கள். தொடர்ந்து வஸ்தி சிகிச்சை அளிக்கப்படும். அதன்பிறகு மூட்டுக்கு பற்று போடுவார்கள். மூட்டு வலியை குறைக்கும் முறி வெண்ணையை வைத்து தாரை செய்வார்கள்.
மூட்டுவலியை குறைக்க சிலாஜித், குக்குலு, குறுந்தொட்டி வேர், கருங்குறிச்சி வேர், ஆமணக்கு வேர், சுக்கு, தேவதாரம், நொச்சி வேர், பூண்டு, வாத நாராயணன், வாத மடக்கி, முதியார் கூந்தல் போன்ற மருந்துகள் பயன்படும். அஸ்வகந்தா இதற்கு சிறப்பாக பயன்படுகிறது. சல்லகி என்ற மரத்தின் பிசினும் நன்றாக வேலை செய்கிறது.
அப்யங்கம் எனப்படும் மசாஜ், எண்ணெயை பஞ்சில் நனைத்து வைத்தல் நடப்பதற்கு உதவியாக இருக்கும். மாற்று மூட்டு அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளலாம். என்றாலும் வலி மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிடக்கூடாது.
கைமருந்து :
மூட்டுவலிக்கு சில கைமருந்துகளும் உள்ளன. வலி இருக்கும் இடத்தில் கருஞ்சீரகம், புளி இலை நீர்விட்டு அரைத்து பூசலாம்.
எலுமிச்சை பழச்சாறு விட்டு சுக்கை அரைத்து பத்து போடலாம்.
குப்பை மேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்து சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து பத்து போடலாம்.
வசம்பை, காசுகட்டி உடன் சேர்த்து அரைத்தும் பத்து போடலாம்.
வெங் காயத்தை, கடுகு எண்ணையு டன் சேர்த்து அரைத்து பத்து போடலாம்.
ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றா மணக்கு இலையை விளக் கெண்ணை விட்டு வதக்கி கட்டு போடலாம்.
பிரண்டை யின் வேர் பொடி, முடக்கத் தான் இலை பொடி, தழுதாழை இலை பொடி, இவற்றை சம அளவு கலந்து அரை ஸ்பூன் மிளகு தூளு-டன் பாலில் சேர்த்து அருந்தலாம்.
சிற்றா முட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து 4 டம்ளர் நீர் சேர்த்து காய்ச்சி அதை ஒரு டம்ளராக வற்றவைத்து அதனை 30 மில்லி அளவுக்கு அருந்த வேண்டும்.
குங்கிலியத்தை பொடித்து அமுக்கரா கிழங்கு பொடி சேர்த்து பாலில் கலந்து பருகலாம்.
ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.