பெண்களின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டும் மார்பகங்கள் சில பெண்களுக்கு பெரிதாகவும், இன்னும் சிலருக்கு சிறியதாகவும் இருக்கும். சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தங்களின் கவர்ச்சியை அதிகரிக்க பல வழிகளைத் தேடி அலைவார்கள். அதில் பணம் இருப்பவர்கள் சிலிகான் மார்பகங்களைப் பொருத்திக் கொள்வார்கள். ஆனால் சிலிகான் பிற்காலத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே மார்பகங்களைப் பெரிதாக்க நினைக்கும் பெண்கள் செயற்கை வழிகளை நாடாமல், இயற்கை வழிகளைப் பின்பற்றி வந்தால், அதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதோடு, மார்பக செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
சரி, இப்போது மார்பகங்களைப் பெரிதாக்க உதவும் சில சமையலறை மூலிகைப் பொருட்களைக் காண்போம். அதைப் படித்து அவற்றில் எதையேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் பின்பற்றி வர நல்ல பலனைக் காணலாம்.
வெந்தயம் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வர, மார்பக திசுக்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, மார்பகங்கள் பெரிதாக ஆரம்பிக்கும்.
அன்னாசிப்பூ அன்னாசிப் பூவும் மார்பகங்களின் அளவைப் பெரிதாக்கும். அன்னாசிப்பூ ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும். உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமானால், மார்பகங்கள் தானாக பெரிதாகும். அதற்கு அன்னாசிப்பூவை டீ வடிவில் உட்பொள்வது நல்லது. ஆனால் இந்த டீயை சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
சோம்பு சோம்பில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் உள்ளது மற்றும் இது தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும். மேலும் இதில் உள்ள இதர உட்பொருட்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும். அதற்கு சோம்பைக் கொண்டு டீ தயாரித்துக் குடியுங்கள்.
அதிமதுரம் அதிமதுரம் சோம்பைப் போன்றது. இதுவும் மார்பகங்களின் வளர்ச்சியைத் தூண்ட உதவும். இந்த அதிமதுரத்தை தினமும் 1 மிலி எடுத்து வந்தால், வயிற்று உப்புசம் நீங்கும். ஆனால் ஏற்கனவே இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் இதை எடுக்கக்கூடாது.
புராரியா மிரிஃபிகா (Pueraria mirifica) தாய்லாந்தைச் சேர்ந்த இந்த மூலிகை, முதுமையைத் தடுக்க தயாரிக்கப்படும் க்ரீம்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை மார்பகங்களைப் பெரிதாக்கவும் உதவும். அதற்கு இது மாத்திரை வடிவில் மருந்துக்கடைகளில் விற்கப்படுகிறது.
கிரேட்டர் பர்டாக் (Greater burdock) இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது மார்பகங்களில் மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.